Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக்-ன் அதிரடி.. இளம் வீரரின் மிரட்டல் பவுலிங்.. முதல் டி20ல் இந்திய அணி அபார வெற்றி!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

Recommended Video

IND vs WI Dinesh Karthik 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து அசத்தல் *Cricket

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் நிகோலஸ் பூரண் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்களை குவித்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணியின் ஓப்பனிங்கில் ரோகித் சர்மா - சூர்யகுமார் யாதவ் ஜோடி சீரான வேகத்தில் ரன்களை குவித்தனர். ஆனால் இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 16 பந்துகளை சந்தித்த அவர் 24 ரன்களை குவித்து அவுட்டானார். இதன்பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகியும், ரிஷப் பண்ட் 14 ரன்களும் எடுத்து அதிர்ச்சி கொடுத்தனர்.

ஏமாற்றிய மிடில் ஆர்டர்

ஏமாற்றிய மிடில் ஆர்டர்

இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா 1 ரன்னுக்கு நடையை கட்டி அதிர்ச்சி கொடுத்தார். மறுமுணையில் ஒற்றையாளாக போராடிய கேப்டன் ரோகித் சர்மா 44 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். எனினும் அணி 138 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 150 ரன்களையாவது இந்திய அணி அடிக்குமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் தினேஷ் கார்த்திக் அதனை மாற்றி அமைத்தார்.

கடைசி நேர ட்விஸ்ட்

கடைசி நேர ட்விஸ்ட்

ஆட்டத்தின் கடைசி 4 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை பவுண்டரி, சிக்ஸர் என அடுத்தடுத்து பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார். 19 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களை விளாசினார். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்

கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது. தொடக்க வீரர்கள் கெயில் மேயர்ஸ் (15), சமார் ப்ரூக்ஸ் (20) என வெளியேற பின்னர் வந்த ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி ஏமாற்றினார். நிதானமாக விளையாடிய கேப்டன் நிகோலஸ் பூரண் 18 ரன்களுக்கு நடையை கட்டினார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

இதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு வெளியேற 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது. சிறப்பாக பந்துவீசிய இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களும், ரவி பிஷ்னாய் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் மற்றவர்கள் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

Story first published: Friday, July 29, 2022, 23:52 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+