Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கு ஒரே ஒரு திட்டம் தான்.. பாகிஸ்தானை வீழ்த்தப்போவது எப்படி?.. கேப்டன் ரோகித் சர்மா ஓபன் டாக்

மெல்பேர்ன்: பாகிஸ்தான் அணியை வீழ்த்துவதற்கான திட்டம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக வரும் அக்டோபர் 23ம் தேதியன்று மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டி20 உலகக்கோப்பை

டி20 உலகக்கோப்பை

உலகக்கோப்பையில் ஒரு முறை கூட பாகிஸ்தானிடம் தோல்வியடையாமல் இருந்து வந்த இந்திய அணி கடந்தாண்டு 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வியடைந்தது. இதுவே மற்ற லீக் போட்டிகளிலும் தோல்வியடைவதற்கான காரணமாக இருந்தது. இதனால் முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற இக்கட்டான சூழலுடன் இந்திய அணி களமிறங்குகிறது.

ரோகித் விளக்கம்

ரோகித் விளக்கம்

இந்நிலையில் பாகிஸ்தான் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். அதில், பாகிஸ்தானுடனான போட்டி மிகவும் சிறப்பான ஒன்று. ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். முதல் போட்டி என்பதால் வெற்றியுடன் தொடங்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். எனவே அதற்காக ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே நாங்கள் போட்டு வைத்துள்ளோம்.

 என்ன திட்டம்

என்ன திட்டம்

அணியில் உள்ள 11 வீரர்களும் தங்களின் மனதை நிதானமாக வைத்துக்கொண்டு, போட்டியின் போது அதனை பதற்றமின்றி செயல்பட்டாலே போதும், நல்ல முடிவு தானாக வரும். மிகவும் பெரிய போட்டி என்ற நினைப்பில் வராமல், மற்ற போட்டிகளை போன்றே தான் இது என்ற நினப்புடன் சென்று மன நிம்மதியுடன் விளையாடினால் கண்டிப்பாக நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் எனக்கூறினார்.

முக்கியமே இல்லை

முக்கியமே இல்லை

தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா, உலகக்கோப்பையை வெல்வதற்கு முன்கூட்டியே பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு குறித்து யோசிக்காமல், ஒவ்வொரு லீக் போட்டியை மட்டும் கவனித்து, தனி தனியாக திட்டமிட்டால் மட்டுமே சாதிக்க முடியும். எனவே எங்களின் நோக்கம் தற்போதைக்கு அரையிறுதி கிடையாது.

Story first published: Thursday, October 20, 2022, 15:43 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+