எதிர்பார்க்காத இடத்திலிருந்து அழுத்தம்.. அந்தர் பல்டி அடித்த ஆஸி... இதுக்குத்தான் இவ்வளவு பேச்சா!
சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டை பிரிஸ்போனில் ஆட இந்திய அணி விரும்பவில்லை என்ற தகவல்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திடீரென மறுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டை பிரிஸ்போனில் ஆட இந்திய அணி விரும்பவில்லை என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்த டெஸ்ட் போட்டியை இந்தியா விரும்பவில்லை.
இந்த டெஸ்டை சிட்னிக்கு மாற்ற வேண்டும் என்று இந்தியா கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியானது.

மாற்றம்
இந்த நிலையில் இந்திய அணியை இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வல்லுநர்கள், அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்தனர். இந்திய அணி விதிகளை மதிக்க வேண்டும். இல்லையென்றால் ஆஸ்திரேலியாவில் இருந்தே வெளியேற வேண்டும். விதிகளை பின்பற்ற விருப்பம் இல்லையென்றால் ஆஸ்திரேலியா வர கூடாது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

மறுப்பு
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்டை பிரிஸ்போனில் ஆட இந்திய அணி விரும்பவில்லை என்ற தகவல்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் திடீரென மறுத்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ நிக் ஹாக்லி கருத்து தெரிவித்துள்ளார், அதில் இந்திய அணி எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இல்லை
டெஸ்ட் போட்டியை இடம் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அணி வைக்கவில்லை. எங்களுக்கு ஆதரவாகவே இந்திய அணி செயல்படுகிறது. இரண்டு அணியும் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடரை ஆட வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்று சிஇஓ நிக் ஹாக்லி கருத்து தெரிவித்துள்ளார்,

அழுத்தம்
இத்தனை நாட்கள் இந்திய அணி மீது குறை சொல்லி வந்த ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் திடீரென இந்திய அணிக்கு ஆதரவாக பேசி உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் பின் வாங்கியதாக கூறப்படுகிறது. பிசிசிஐ நிர்வாகிகள், ஐசிசி நிர்வாகிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பின்வாங்கியதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications