Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்-ஆல் இந்திய அணிக்கு வந்த சிக்கல்.. ஐசிசி கோப்பையை மீண்டும் இழக்க நேரிடுமா??.. ரசிகர்கள் கவலை!

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதிலும், தயாராவதிலும் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை பெரும் பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக கைப்பற்றியுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கும் முன்னேறியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி தொடங்கும் எனக்கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற ஓவல் மைதானத்தில் போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதிப்பாரா ரோகித்?

சாதிப்பாரா ரோகித்?

கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக போராடி வந்த விராட் கோலியும் கேப்டன்சி பதவியில் இருந்தே விலகிவிட்டார். அவரின் தலைமையில் கடந்த முறையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை முன்னேறி இந்திய அணி ஏமாற்றம் கண்டது. எனவே இந்த முறை அதை ரோகித் சர்மாவாவது நிறைவேற்றி வைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 புதிய சிக்கல்

புதிய சிக்கல்

என்னதான் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தற்போது வென்றிருந்தாலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்வது சற்று கடினமாகும். ஏனென்றால் ஐபிஎல் தொடர் சிக்கலாக அமைந்துள்ளது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மே 28ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முடிந்த ஒரே வாரத்தில் ஆஸ்திரேலியாவுடனான இறுதிப்போட்டி நடக்கவுள்ளது.

பிசிசிஐ சமாளிக்குமா?

பிசிசிஐ சமாளிக்குமா?

இங்கிலாந்து நாட்டின் ஆடு களத்தில் அதிகப்படியான ஸ்விங்கும், பவுன்ஸும் இருக்கும். அங்குள்ள சூழல்களுக்கு ஏற்றவாறு தயாராக குறைந்தபட்சம் 2 வாரத்திற்கு முன்பு இருந்தே பயிற்சியை தொடங்க வேண்டும். ஆனால் ஐபிஎல்-ல் 28ம் தேதி வரை விளையாடும் வீரர்கள், எப்படி ஒரு வாரத்திற்குள் தயாராவது என்ற கேள்வி உள்ளது. டி20 மனநிலையுடன் இருக்கும் அவர்கள், டெஸ்ட் போன்ற நிதானமான ஃபார்மெட்டிற்கு மாற வேண்டும்.

ஒரே ஒருவர் எஸ்கேப்

ஒரே ஒருவர் எஸ்கேப்

சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாராவை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதனால் அதிக பணிச்சுமைகளுக்கும், காயங்களுக்கும் வாய்ப்புகள் இருக்கும். எனவே அந்த சவால்களை எப்படி சமாளித்து அணியை உருவாக்கவுள்ளனர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோருக்கு சரியான ஓய்வை தர வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, March 14, 2023, 14:22 [IST]
Other articles published on Mar 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+