Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் அதே பிரச்சினையா.. வங்கதேசத்துடனான 2வது டெஸ்ட்.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

தாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டி குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

ஒருநாள் போட்டி தொடரில் தோல்வியடைந்த சூழலில் டெஸ்ட் தொடரில் தொடக்கத்திலேயே வெற்றி பெற்றதன் மூலம் 1 - 0 என முன்னிலை பெற்றது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 22ம் தேதி தாக்காவில் உள்ள ஸ்ரீ பங்களா தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. தோல்விக்கான பதிலடியை கொடுக்க வங்கதேச அணியும், வெற்றி பாதையில் சென்று ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணியும் முனைப்பு காட்டும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிசிசிஐ அறிவிப்பு

பிசிசிஐ அறிவிப்பு

இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கேப்டன் ரோகித் சர்மா 2வது போட்டியிலும் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்கதேசத்துடனான 2வது ஒருநாள் போட்டியின் போது கை விரலில் ஏற்பட்ட காரணமாக பாதியிலேயே விலகினார். மேலும் மும்பைக்கும் திரும்பினார்.

பெரிய காயம்

பெரிய காயம்

2வது டெஸ்டிற்காவது அணிக்கு வருவார் என கூறப்பட்டு வந்த சூழலில், காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால் மீண்டும் கொண்டு வந்து ரிஸ்க் எடுக்க வேண்டாம் என பிசிசிஐ நினைத்துள்ளது. ஏனென்றால் தீபக் சஹார், பும்ரா போன்ற வீரர்களை முழுமையாக குணமடையாமல் கொண்டு வந்ததால், அது பெரிய காயமாக மாறியது. அதனை மனதில் வைத்து தான் இந்தமுடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எப்போது வருவார்

எப்போது வருவார்

இந்திய அணி அடுத்ததாக சொந்த மண்ணில் இலங்கை அணியை எதிர்கொள்ளவுள்ளது. ஜனவரி மாதம் தொடங்கும் இந்த மோதலில் இரு அணிகளும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோதவுள்ளன. இந்த தொடரில் நிச்சயம் ரோகித் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, December 19, 2022, 20:02 [IST]
Other articles published on Dec 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+