Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வங்கதேசத்திடம் சரணடையும் இந்தியா.. வித்தியாச முடிவால் வந்த விணை.. 145 ரன்களை விரட்ட முடியாமல் திணறல்

டாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி ஒரு சிறிய தவறால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெற்றிக்கு அருகில் செல்லுமா என்பதிலேயே சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த 2வது டெஸ்ட் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2 இன்னிங்ஸ்களையும் முடித்த வங்கதேச அணி 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் பின்னடைவாக இருந்த வங்கதேசம் 2வது இன்னிங்ஸில் இன்று வேகம் காட்டியது. ஆனால் இந்திய பவுலர்களிடம் அவர்களின் யுக்திகள் எடுபடவில்லை.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின் மாஸ் காட்டிய சூழலில், 2வது இன்னிங்ஸில் அக்‌ஷர் பட்டேலும் பார்டியில் இணைந்தார். இந்தியாவின் சிறப்பான பவுலிங்கால் இந்த முறையும் வங்கதேச பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதிகபட்சமாக சாகீர் ஹாசன் 51 ரன்களையும், லிட்டன் தாஸ் 73 ரன்களையும் அடிக்க ஓரளவிற்கு ரன்கள் உயர்ந்தது. இதனால் 231 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

குறைவான இலக்கு

குறைவான இலக்கு

இந்தியா ஏற்கனவே 87 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் 145 ரன்கள் தான் இலக்காக இருந்தது. குறைந்த இலக்கு என அசால்ட்டாக இருந்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்தது வங்கதேசம். ஓப்பனிங் வீரர்கள் சுப்மன் கில் 35 பந்துகளில் வெறும் 7 ரன்களையும், கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன்களையும் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு வந்த புஜாராவும் 6 ரன்களை மட்டுமே அடித்தார்.

மோசமான செயல்பாடு

மோசமான செயல்பாடு

4வது வீரராக கோலி தான் வர வேண்டும். ஆனால் வித்தியாசமாக செய்கிறோம் என்ற பெயரில் அக்‌ஷர் பட்டேலை டாப் ஆர்டரில் கொண்டு வந்தனர். இதே போல ஜெய்தேவ் உனத்கட்டையும் மிடில் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கொடுத்தனர். இடம் மாற்றி களமிறங்கிய விராட் கோலி வெறும் 1 ரன்னுக்கு நடையை கட்டினார். இதனால் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 45 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

வல்லுநர்கள் எச்சரிக்கை

வல்லுநர்கள் எச்சரிக்கை

2 நாட்கள் முழுவதுமாக இருப்பதால் அசால்ட்டான செயல்பாடுகளில் இந்திய வீரர்கள் இருந்ததாலேயே இந்த சரிவு ஏற்பட்டதாக வல்லுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளைய தினம் இன்னும் ஸ்பின்னர்களுக்கு உதவியாக இருக்கலாம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story first published: Saturday, December 24, 2022, 18:16 [IST]
Other articles published on Dec 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+