Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு பெரும் அடி.. முதல் போட்டிக்கு முன்னரே இப்படி நடப்பதா?.. வங்கதேசத்தை எப்படி சமாளிக்குமோ

டாக்கா: வங்கதேச அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. நியூசிலாந்துடனான தோல்விக்கு பின் கம்பேக் கொடுக்க இந்த தொடர் முக்கியமாகும்.

இதற்காக இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் கம்பேக் தரவுள்ளனர். அடுத்த உலகக்கோப்பைகான ஏற்பாடாக இது இருக்கும்.

முதல் போட்டி

முதல் போட்டி

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் உள்ள மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. சரியாக காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்கூட்டியே வங்கதேசம் சென்றுள்ள இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் சமாளிப்பது கடினம் என்பதால் வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

பெரும் பின்னடைவு

பெரும் பின்னடைவு

இந்நிலையில் இந்திய அணிக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அணியின் முன்னணி வீரரான முகமது ஷமி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முற்றிலும் விலகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத நேரத்தில் ஷமியும் கைவிட்டுள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

வலைப்பயிற்சியின் போது முகமது ஷமி சற்று கூடுதல் நேரம் பவுலிங் செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென தோள்பட்டையில் ஏற்பட்ட பாதிப்பால், வலியில் துடித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு அணியின் பிசியோதெரபிஸ்ட்கள் சிகிச்சை கொடுத்து வருகின்றனர். முகமது ஷமிக்கு மாற்று வீரராக இந்தியாவின் வேகப்புயல் உம்ரான் மாலிக் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

உம்ரானின் எண்ட்ரி

உம்ரானின் எண்ட்ரி

நியூசிலாந்து அணியுடனான தொடரில் அறிமுகமான உம்ரான் மாலிக், 3 போட்டிகளில் விளையாடி 3 முக்கிய விக்கெட்களை கைப்பற்றினார். அவர் வங்கதேசத்திற்கு எதிராகவும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உம்ரான் மாலிக்கிற்கு துணையாக ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சஹார் போன்றோர் விளையாடவுள்ளனர்.

Story first published: Saturday, December 3, 2022, 12:13 [IST]
Other articles published on Dec 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+