Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவுக்கு உள்ள 2 முக்கிய பலவீனங்கள்.. டி20 உலகக்கோப்பையில் அதை சரி செய்தே தீர வேண்டும்.. விவரம்!

மெல்பேர்ன்: டி20 உலகக்கோப்பை தொடரை எதிர்கொள்ள இந்திய அணிக்கு 2 முக்கியமான பலவீனங்கள் உள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இதில் இந்திய அணி வரும் அக்டோபர் 23ம் தேதியன்று முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

உலகக்கோப்பை கனவு

உலகக்கோப்பை கனவு

கடைசியாக தோனி தலைமையில் கடந்த 2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இந்த முறையாவது ரோகித் சர்மா தலைமையில் அது நடைபெறுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கேற்றார் போல இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று வருகிறது.

பலவீனங்கள்

பலவீனங்கள்

இந்நிலையில் இந்திய அணி தனக்குள்ள 2 பலவீனங்களை சரிசெய்தால் தான் வெற்றி பெற முடியும். இந்தியாவுக்கு முதல் பிரச்சினையாக இருப்பது டெத் ஓவர் பவுலிங் தான். பும்ரா இல்லாததால் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் டெத் ஓவர்களில் ரன்களை கசியவிட்டு வருகின்றனர். புவனேஷ்வர் குமார் மீது ரசிகர்கள் நம்பிக்கையே இழந்துவிட்டனர். முகமது ஷமியாவது உதவினால் மட்டுமே தற்போது இந்தியாவுக்கு சிறப்பாக இருக்கும்.

பேட்ஸ்மேன்களின் பிரச்சினை

பேட்ஸ்மேன்களின் பிரச்சினை

இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல ஃபார்மில் இருந்தாலும், இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இன்னும் திணறி வருகின்றனர். குறிப்பாக டாப் மூன்று வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகிய மூன்று பேருமே இடதுகை பவுலர்களை சமாளிக்க சிரமப்பட்டு வருகின்றனர். சாஹீன் அஃப்ரிடியும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் கடந்தாண்டை போலவே இந்தாண்டும் ஆகாமல் இருக்க கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

புது பயிற்சிகள்

புது பயிற்சிகள்

மேற்கூறிய இரண்டு பலவீனங்களுமே கடந்த டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணிக்கு இருந்து வருகிறது. எனினும் இந்த முறை புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர்கள் இருப்பதால், அதற்கு ஒரு விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் 23ம் தேதி நடைபெறும் பாகிஸ்தானுடனான முதல் போட்டியில் அது தெரிந்துவிடும்.

Story first published: Thursday, October 20, 2022, 19:50 [IST]
Other articles published on Oct 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+