Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடக்கடவுளே.. கடைசி 2 நாட்களில் காத்திருக்கும் வேட்டை..இந்தியா எடுத்த முடிவு சரியா?- ரசிகர்கள் கேள்வி

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்த 2 நாட்களுக்கு சாதகமாக இருக்கும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் உள்ள மைதானத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது.

சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 404 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய வங்கதேச அணி வெறும் 150 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் பரிகொடுத்தது.

முதல் டெஸ்ட் போட்டி

முதல் டெஸ்ட் போட்டி

254 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு மீண்டும் பேட்டிங் படை அட்டகாசமாக இருந்தது. புஜாரா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் சதமடிக்க 258 ரன்களுக்கு 2 விக்கெட்களை குவித்தது. இதனால் 500 ரன்களுக்கும் மேல் முன்னிலையுடன் சென்ற போது திடீரென கேப்டன் கே.எல்.ராகுல் டிக்ளெர் செய்வதாக அறிவித்தார்.

கடினமான இலக்கு

கடினமான இலக்கு

இதனால் இந்திய அணி வங்கதேசத்திற்கு 513 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 3வது நாளில் ஒரு செஷன் முழுவதுமாக உள்ளது, 2 நாட்கள் முழுவதுமாக உள்ளது, அதற்குள்ளாக கே.எல்.ராகுல் ஏன் டிக்ளெர் செய்தார்? 600 ரன்களை அடித்திருந்தால் டிஃபண்ட் செய்ய கடினமாக இருந்திருக்கலாமே என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

அடுத்த 2 நாள்

அடுத்த 2 நாள்

இந்நிலையில் அடுத்த 2 நாட்கள் இந்தியாவுக்கு நல்ல வேட்டை இருப்பதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர். போட்டி நடைபெறும் சட்டோகிராம் மைதானத்தில் முதல் 2 நாட்களுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக சற்று இருக்கும் எனக்கூறப்பட்டது. ஆனால் அதை மீறி இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் அடித்துவிட்டனர். ஆனால் கடைசி 2 நாட்களில் தான் ஸ்பின்னர்களுக்கு அந்த பிட்ச் எப்படி கைக்கொடுக்கும் என்பதை முழுமையாக பார்ப்போம் எனக்கூறியுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

அதிகப்படியான பந்துகள் வீசப்பட்டிருப்பதால், இந்த களத்தில் கடைசி 2 நாட்களில் நன்கு டேர்ன் ஆகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இவர்களை தாண்டி வங்கதேசம் 300 ரன்களை அடிப்பதே பெரிய விஷயம் என்பதால் 500 ரன்கள் எப்படி குவிக்கப்போகிறது என பார்க்கலாம்.

Story first published: Friday, December 16, 2022, 23:11 [IST]
Other articles published on Dec 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+