For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஃபாஸ்ட் பவுலர் தானா.. டி20 உலகக்கோப்பையில் ரிஸ்க் எடுக்கும் இந்தியா.. கொஞ்சம் கஷ்டம் தான்!

பெர்த்: டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் மட்டுமே இந்திய அணி களமிறங்குவதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் கடைசி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து அணிகளும் தங்களது ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்ய தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியில் பேட்டிங் அசுர பலத்தில் உள்ள போதும், பவுலிங் கவலைக்கிடமாக உள்ளது. பும்ராவுக்கு மாற்று வீரராக ஷமி அல்லது சிராஜ்-ல் யார் வருவார் என இன்னும் தெரியவில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் முதன்மை வீரராக உள்ள போதும் அவர்கள் ஃபார்மில் இல்லை. ஏற்கனவே 3 வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதால் அர்ஷ்தீப் சிங் உட்காரவைக்கப்படுவார் எனத்தெரிகிறது.

பிசிசிஐ எடுத்த ரிஸ்க்

பிசிசிஐ எடுத்த ரிஸ்க்

இந்நிலையில் பிசிசிஐ பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய மைதானங்கள் அனைத்திலுமே அதிக வேகம் மற்றும் பவுன்ஸ் ஆக கூடிய களங்கள் தான் இருக்கும். இதற்காக தான் அனைத்து அணிகளும் நல்ல வேகமும், ஸ்விங் ஆகும் வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அழைத்துச் சென்றுள்ளன. ஆனால் இந்திய அணி மட்டும் வித்தியாசமான முடிவு எடுத்துள்ளது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்திய பவுலிங் படையில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் பட்டேல் இருவருமே மீடியம் ஃபேஸ் பவுலர்கள் தான் ஆகும். 130 - 140 கிமீ வேகத்தில் தான் வீசும் இவர்கள் ஸ்விங் மட்டும் கட்டர்களை வீசுவதில் சிறப்பாக உள்ளனர். 140+ வேகத்தில் வீச முகமது ஷமி அல்லது சிராஜ் மட்டுமே இருக்கிறார். இவர்களை தவிர ஹர்திக் பாண்ட்யா அவ்வபோது 140+ வேகத்தில் வீசுகிறார்.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

அதிவேகமாக இருக்கக்கூடிய களங்களில் புவி, ஹர்ஷல் என குறைந்த வேகத்தை கொண்ட இரு பவுலர்களை கொண்டு சென்றால் அது எதிரணி பேட்டர்களுக்கு அதிரடி காட்ட சாதகமாக அமைந்துவிடும். இதனால் இதுகுறித்து டிராவிட் மற்றும் ரோகித் நிச்சயம் ஆலோசனை செய்ய வேண்டும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Thursday, October 13, 2022, 9:26 [IST]
Other articles published on Oct 13, 2022
English summary
Team India take a big risk in the playing 11 for t20 world cup 2022, have only one fast bowler in the team - here is how
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+