Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“உண்மையில் இதுதான் நடந்தது”.. சாஹாவின் பரபரப்பு குற்றச்சாட்டு.. மௌனம் கலைத்த ராகுல் டிராவிட்!

கொல்கத்தா: விருதிமான் சாஹா வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

Recommended Video

Wriddhiman Sahaவை மிரட்டிய Journalist! Dravid, Ganguly சொன்னது என்ன | OneIndia Tamil

இந்திய அணியின் சீனியர் வீரரான சாஹா, சமீபத்தில் பதிவிட்ட ஒரு ட்வீட் மற்றும் ஒரு குற்றச்சாட்டு பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

பிசிசிஐ தலைவர் கங்குலி, தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என முக்கிய புள்ளிகள் மீதே தாக்கியுள்ளார்.

சாஹா குற்றச்சாட்டு

சாஹா குற்றச்சாட்டு

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சாஹாவின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்து பேசியிருந்த சாஹா, தென்னாப்பிரிக்க தொடர் முடிந்து நாடு திரும்பிய போது, இனி எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என அணி நிர்வாகமே கூறியது. தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா, இனி அணியில் என்னை எடுக்க பரிந்துரைக்கப்படாது எனத்தெரிவித்தார்.

ஓய்வு

ஓய்வு

இது ஒருபுறம் இருக்க, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டே நேரடியாக என்னிடம் வந்து, இனி அணியில் எனக்கான இடம் கிடைக்காது. ஓய்வு எடுப்பது குறித்து இனியாவது சிந்திப்பதே எனக்கு நல்லது எனக்கூறிவிட்டு சென்றார். இது கடும் மன உளைச்சலை கொடுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ராகுல் டிராவிட் விளக்கம்

ராகுல் டிராவிட் விளக்கம்

இந்நிலையில் இதற்கு டிராவிட் பதிலளித்துள்ளார். சாஹாவின் குற்றச்சாட்டால் நான் காயப்படவில்லை. அவர் மீதும், அவரின் சாதனைகள் மீது எனக்கு பெரும் மரியாதை உள்ளது. அதன் அடிப்படையில் தான் அவரிடம் பேசினேன். அவருக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற நேர்மையான பதிலும், தெளிவும் கிடைக்க வேண்டும் என நினைத்தேன்.

இது எனது கடமை

இது எனது கடமை

இதை நான் அனைத்து வீரர்களுக்குமே தான் செய்து வருகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு முறை ப்ளேயிங் 11ஐ தேர்வு செய்யும் போதும் அவர்களுக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை தெரியப்படுத்த வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ஆனால் அனைத்து வீரர்களுமே அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும், சகஜமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. சில நேரங்களில் இதுபோன்று நடக்கலாம். இதில் எனக்கு வருத்தம் இல்லை.

 பின்னணியில் ரிஷப் பண்ட்

பின்னணியில் ரிஷப் பண்ட்

இந்தாண்டு 3 டெஸ்ட் தொடர்கள் தான் உள்ளது. அதற்காக ரிஷப் பண்ட் இந்தியாவின் நம்பர் 1 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்றாகிவிட்டார். அவருக்கு அடுத்தபடியாக இளம் வீரராக கே.எஸ்.பரத் போன்றோரை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை தான் சாஹாவிடம் கூறினேன். இதற்கு ஒரே தீர்வு இனி இதுபோன்ற விளக்கங்களை வீரர்களிடம் கொடுக்காமல் இருப்பது தான். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அதனை தெரிவிப்பது எனது கடமை என டிராவிட் கூறியுள்ளார்.

Story first published: Monday, February 21, 2022, 13:05 [IST]
Other articles published on Feb 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+