Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

13 வருட ரெக்கார்ட் முறியடிப்பு.. 4வது டெஸ்டில் சறுக்கிய இந்திய அணி.. முதல் நாளில் என்ன நடந்தது?

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடக்கத்திலேயே தடுமாறி வருகிறது. வெற்றி பெறுவோமா என ரசிகர்கள் கவலையுடன் காத்துள்ளனர்.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் தொடங்கியது. தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய போட்டி இதுவாகும்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

தொடக்கமே சறுக்கல்

தொடக்கமே சறுக்கல்

ஓப்பனிங் வீரர்கள் டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் மிகவும் நிதானமாக தொடங்கி, பின்னர் சீரான வேகத்தில் 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.நீண்ட நேரம் போராடி ஹெட்டை 32 ரன்களுக்கு வெளியேற்றினார் அஸ்வின். இதன் பின்னர் வந்த மார்னஸ் லபுசாக்னே 3 ரன்களும், கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்கள், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்களுக்கு வெளியேறியதால் இந்திய ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

அச்சுறுத்திய கவாஜா

அச்சுறுத்திய கவாஜா

ஆனால் நீண்ட நேரம் அந்த மகிழ்ச்சியை நீடிக்க விடவில்லை கேமரூன் கிரீன். ஒருபுறம் அதிரடி நாயகன் கேமரூன் கிரீன் மற்றொரு புறம் தூண் போல செட்டிலாகி நின்ற உஸ்மான் கவாஜா என இருந்ததால் ரன்கள் குவிந்துக்கொண்டே இருந்தன.முந்தைய போட்டிகளை போல இல்லாமல் இந்த முறை பவுலிங்கிற்கு ஏற்ற பிட்ச் ஆக அமையவில்லை. மாறாக பேட்ஸ்மேன்களுக்கு முற்றிலுமாக சாதகமாக இருந்தது.

 கவாஜாவின் சதம்

கவாஜாவின் சதம்

இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட உஸ்மான் கவாஜா 251 பந்துகளில் 104 ரன்களை விளாசினார். 2010ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் சதமடித்த முதல் ஆஸ்திரேலிய ஓப்பனர் என்ற பெருமையை பெற்றார். இன்று வீசப்பட்ட 90 ஓவர்களில் சராசரியாக 40 ஓவர்களை கவாஜா மட்டுமே ஆடினார்.

 முதல் நாள் முடிவு

முதல் நாள் முடிவு

மற்றொருபுறம் கேமரூன் கிரீன் 64 பந்துகளில் 49 ரன்களை அடித்து வலுவாக இருக்கிறார். இதனால் முதல் நாளின் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 255 ரன்களை குவித்துள்ளனர்.இந்த போட்டியில் கம்பேக் தர வேண்டும் என்றால் நாளைய தினம் இந்தியா வெகு சீக்கிரமாக விக்கெட்களை எடுத்தே தீர வேண்டும்.

Story first published: Thursday, March 9, 2023, 17:25 [IST]
Other articles published on Mar 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+