Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இரண்டு வெவ்வேறு பிட்ச்.. 4 வது டெஸ்டில் இந்தியாவுக்கு தலைவலி.. என்ன நடந்தது?

அகமதாபாத்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் இந்திய அணி குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டுக்கு ஒன்று என இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனை எடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது. அகமதாபாத்தில் உள்ள மோதிரம் மைதானத்தில் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிட்ச் சர்ச்சை

பிட்ச் சர்ச்சை

இந்தத் தொடர் தொடங்கியது முதலில் பிட்ச் மீதான விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. முதல் இரண்டு போட்டிகள் மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த நிலையில், மூன்றாவது போட்டி மூன்றாவது நாளின் நிலையே முடிந்துவிட்டது. எனினும் இந்தியா அதில் தோல்வி அடைந்தது.

புதிய குழப்பம்

புதிய குழப்பம்

இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அகமதாபாத் பிட்ச் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த முறை சூழலுக்கு ஏற்ற களமா? அல்லது வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற களமா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஏனென்றால் இரண்டு வெவ்வேறு பிட்ச் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிட்ச்

இரண்டு பிட்ச்

இரண்டு பிட்ச்களில் ஒன்று வழக்கம்போல சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்றார் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பிட்ச் ஆனது வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் பின்னர் சுழலுக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றை தேர்வு செய்வதில் தான் குழப்பமே உள்ளது.

காரணம் என்ன?

காரணம் என்ன?

கடந்த போட்டியில் பலத்த அடி வாங்கிய இந்திய அணி பேட்டிங் வரிசை இந்த முறையும் கடினமான பிட்ச்- ல் விளையாடி ரிஸ்க் எடுக்குமா? அல்லது பேட்டிங்கிற்கு ஏற்ற களத்தில் விளையாடுமா என்ற குழப்பத்தில் உள்ளது. இது குறித்து விரைவில் ரோகித் முடிவெடுப்பார் என தெரிகிறது.

Story first published: Tuesday, March 7, 2023, 19:21 [IST]
Other articles published on Mar 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+