Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்.. ஒரு குட்டி டி20 தொடர்.. அமெரி்க்காவில்... பிசிசிஐ திட்டம்!

டெல்லி: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒரு மினி டி20 தொடரை அமெரிக்காவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் யோசித்து வருகின்றனவாம்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தால் இந்தத் தொடர் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இப்படி நடந்தால் அமெரிக்க மண்ணில் நடைபெறும் முதலாவது இரு தரப்பு டி20 தொடராகவும் இது அமையும்.

அனேகமாக புளோரிடாவில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இந்த தொடர் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மினி ஐபிஎல் தொடர் ஒன்றை இந்தியாவுக்கு வெளியே நடத்தப் போவதாக பிசிசிஐ கூறியுள்ளது நினைவிருக்கலாம்.

புளோரிடாவில்

புளோரிடாவில்

தற்போதைய திட்டப்படி புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான டி20 தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.

கரிபீயன் பிரீமியர் லீக் போட்டிகள்

கரிபீயன் பிரீமியர் லீக் போட்டிகள்

தற்போது இதே மைதானத்தில்தான் கரீபியின் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதே மைதானத்திலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான போட்டியையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம்.

வங்கதேசமும் வரலாம்

வங்கதேசமும் வரலாம்

அதேசமயம், வங்கதேசத்தையும் இதில் இணைத்து முத்தரப்பு டி20 தொடராக நடத்தலாமா என்ற திட்டமும் பிசிசிஐக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.

விரைவில் பேச்சு

விரைவில் பேச்சு

இந்த விவகாரம் தொடர்பாக புளோரிடாவில் கூடி மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். அப்போது இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.

மேற்கு இந்தியாவில் இந்தியா

மேற்கு இந்தியாவில் இந்தியா

தற்போது விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Wednesday, July 27, 2016, 20:06 [IST]
Other articles published on Jul 27, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+