For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 சிறந்த வீரர்களுக்கு ஆப்பு... 2வது டி20ல் இந்திய அணி பேட்டிங்.. ப்ளேயிங் 11 விவரம் இதோ!!

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி பெர்மிங்கம்மில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மொயீன் அலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

இந்திய அணியில் முதல் டி20 போட்டியில் ஓய்வில் இருந்த முன்னணி வீரர்கள் இந்த போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளனர். ஓப்பனிங்கில் இஷான் கிஷான் நீக்கப்பட்டு, அந்த இடத்திற்கு விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். முதல் விக்கெட்டிற்கு தீபக் ஹூடா களமிறங்கிய சூழலில் அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் விளையாடவுள்ளார்.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். அவரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் என அதிரடி வீரர்கள் பேட்டிங் வரிசையில் உள்ளனர். தினேஷ் கார்த்திக் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால், அவரை நீக்க முடியாமல், ஹூடாவை நீக்கியுள்ளனர்.

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா அணிக்கு திரும்பியுள்ளதால் அக்‌ஷர் பட்டேல் வெளியேற்றப்பட்டுள்ளார். இதே போல சீனியர் வீரர் ஜஸ்பிரித் பும்ரா வந்துள்ளதால் ஹர்ஷல் பட்டேல் நீக்கப்பட்டிருக்கிறார். மொத்தமாக 4 மாற்றங்கள் செய்யப்பட்டு, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுவேந்திர சஹால்

Story first published: Saturday, July 9, 2022, 19:02 [IST]
Other articles published on Jul 9, 2022
English summary
India vs england 2nd t20 ( இந்தியா vs இங்கிலாந்து 2வது டி20 போட்டி ) இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 முக்கிய மாற்றங்களுடன் களமிறங்கியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+