Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனி கோலியை எப்படி கையாள்வீர்” ரோகித்சர்மா கூறிய பெருந்தன்மையான பதில்.. விமர்சித்தவர்களுக்கே வியப்பு

மும்பை: இந்தியாவின் ஒருநாள் அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா, விராட் கோலி குறித்து பேசியுள்ளார்.

Recommended Video

Team India new captain Rohit Sharma says virat kohli is still a leader of the team | Oneindia Tamil

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, நேற்று திடீரென ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவே ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

விராட் கோலிக்கு ஒருநாள் அணியின் கேப்டன்சியை விட்டு தர துளி கூட விருப்பம் இல்லை எனக்கூறப்படுகிறது. வரும் 2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்த விருப்பம் தெரிவித்தார். ஆனால் தற்போது பிசிசிஐ எடுத்துள்ள முடிவால் அதிருப்தியில் உள்ள கோலி, இனி பெரிய அளவில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் முழு கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

ரோகித் பதிலடி

ரோகித் பதிலடி

இந்நிலையில் புதிய கேப்டன் ரோகித் சர்மா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ஒரு பேட்ஸ்மேனாக விராட் கோலி இந்திய அணிக்கு கண்டிப்பாக தேவை. டி20 கிரிக்கெடில் 50 ரன்கள் சராசரியாக வைத்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அப்படிபட்ட பெருமை கொண்டவர் விராட் கோலி.

அவர் நிச்சயம் வேண்டும்

அவர் நிச்சயம் வேண்டும்

இந்திய அணி இக்கட்டான சூழல்களில் இருந்தபோது பல முறை விராட் கோலி தனது பேட்டிங்கால் காப்பாற்றியுள்ளார். அவரை போன்ற திறமையான பேட்ஸ்மேன் அணிக்கு வேண்டும். கோலி இன்னும் இந்திய அணியின் தலைவர் தான். அவர் அணியில் இல்லாவிட்டால் பெரும் இழப்பு நமக்கு தான் என ரோகித் சர்மா பேசியுள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு வரும் டிசம்பர் 26ம் தேதி முதல் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்கள் நடைபெறவிருக்கின்றனர். இதில் ரோகித் சர்மாவின் கீழ் எப்படி விராட் கோலி செயல்பட போகிறார் என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்.

Story first published: Thursday, December 9, 2021, 23:18 [IST]
Other articles published on Dec 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+