Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நம்ம கோலியா இது” புத்தாண்டு கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போட்ட இந்திய வீரர்கள்.. தீயாய் பரவும் பதிவு

செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்திய அணி வீரர்கள் படு உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடி உள்ளனர், அவர்கள் செய்த சேட்டைகள் இணையத்தை கலக்கி வருகிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

செஞ்சூரியன் என்ற தென்னாப்பிரிக்க அணியின் கோட்டை தகர்த்தெரிந்து புத்தாண்டை வரவேற்றுள்ளனர் இந்திய அணியினர்.

தென்னாப்பிரிக்க டூர்

தென்னாப்பிரிக்க டூர்

2021ம் ஆண்டில் இந்திய டெஸ்ட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. டி20 உலகக்கோப்பை தொடர் தான் சரிவர அமையவில்லை. எனினும் மற்ற தொடர்களில் சிறப்பாகவே அமைந்தன. ஜனவரியில் ஆஸ்திரேலியாவின் காப்பா மற்றும் டிசம்பர் இறுதியில் செஞ்சூரியன் என 2 வரலாற்று வெற்றிகளை விராட் கோலி தலைமையிலான அணி வெற்றி பெற்றது.

புத்தாண்டு

புத்தாண்டு

இதே உற்சாகத்துடன் இந்திய அணி வீரர்கள் நேற்று புத்தாண்டை கொண்டாடினர். இதற்காக அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் பபுளிலேயே சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வீரர்கள் ஆட்டம், பாட்டம் என படு உற்சாகமாக கொண்டாடித் தீர்த்துள்ளனர்.

வைரல் புகைப்படங்கள்

வைரல் புகைப்படங்கள்

இதனை அனைத்து வீரர்களும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளனர். அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விராட் கோலி, முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்கள், இளம் வீரர்களுடன் சேர்ந்து குதூகலமாக நடனம் ஆடியுள்ளனர்.

2022ம் ஆண்டு போட்டிகள்

2022ம் ஆண்டு போட்டிகள்

இந்தியா அணிக்கு 2022ம் ஆண்டிலும் பல முக்கிய போட்டிகள் காத்துள்ளன. தென்னாப்பிரிக்க தொடர், இலங்கை, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுடன் மோதவுள்ளது. இதுமட்டுமல்லாமல் 2022ம ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது.

Story first published: Saturday, January 1, 2022, 13:51 [IST]
Other articles published on Jan 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+