Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அது அவங்க உரிமை.. பீப் சாப்பிட்ட ரோஹித் சர்மா?.. விசாரிக்கப்படும் 5 வீரர்கள்..வெளியான ஹோட்டல் பில்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஐந்து பேரும் பீப் சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

இந்திய அணியில் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று தனித்தனி டயட் பிளான்களை வைத்துள்ளனர். தங்கள் உடல் மற்றும் உணவு முறைக்கு ஏற்றபடி அவர்கள் உணவு உட்கொள்கிறார்கள்.

உதாரணமாக விராட் கோலி முழுக்க முழுக்க வீகனாக மாறிவிட்டார். இவர் முழு சைவத்திற்கு மாறிய பின் அவரின் ஆட்டத்திலும் கொஞ்சம் வேகமும் துல்லியமும் குறைந்துள்ளது. பேட்டிங்கில் பார்ம் இழந்துள்ளது.

கோலி

கோலி

இன்னும் சில வீரர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள். ரோஹித் சர்மா, சைனி, பண்ட் போன்றவர்கள் டயட் இருந்தாலும் மாமிசம் சாப்பிடுவார்கள். அதிலும் சில வீரர்கள் பீப் சாப்பிடுவார்கள். புரோட்டின், கொழுப்பு சத்து தேவை என்பதால் இவர்கள் பீப் சாப்பிடுகிறார்கள்.

ஏன்

ஏன்

இந்த நிலையில்தான் ரோஹித் சர்மா, பண்ட், சைனி, பிரித்வி ஷா, சுப்மான் கில் உள்ளிட்ட வீரர்கள் ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றில் உணவு உட்கொண்டதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு உணவு உட்கொள்ளும் போது கிரிக்கெட் ரசிகர் ஒருவரை இவர்கள் கட்டிப்பிடித்தாக கூறி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிக்கல்

சிக்கல்

கொரோனா விதிகளை மீறி இவர்கள் செயல்பட்டதாக கூறி சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளனர். இந்த சர்ச்சை ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் இந்திய வீரர்கள் உட்கொண்ட உணவின் பில் வெளியானது. அதாவது இவர்கள் சாப்பிட்ட உணவிற்கு அங்கிருந்த ரசிகர் ஒருவர்தான் பில் கட்டி இருக்கிறார்.

பில்

பில்

அந்த உணவு பில்லில் ரோஹித் சர்மா உட்பட 5 வீரர்களும் பீப் சாப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரோஹித் சர்மா பீப் சாப்பிட்டதாக இணையத்தில் பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் 5 வீரர்களில் யாரெல்லாம் பீப் சாப்பிட்டார்கள் என்பது உறுதியாகவில்லை. இந்த நிலையில் இந்திய வீரர்கள் எப்படி பீப் சாப்பிடலாம் என்று இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

சிக்கல்

சிக்கல்

ஆனால் பீப் சாப்பிடுவது வீரர்களின் உரிமை. இந்திய வீரர்கள் பீப் சாப்பிட கூடாது என்று பிசிசிஐ தடை எதையும் விதிக்கவில்லை. அதேபோல் வீரர்கள் தங்கள் உணவை தேர்வு செய்ய முழு உரிமை உள்ளது. இதனால் அவர்கள் பீப் சாப்பிட்டதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறார்கள்.

ஏற்படுத்தாது

ஏற்படுத்தாது

இந்திய அணிக்குள் உணவு கட்டுப்பாடு இல்லை. இந்த பீப் விஷயம் இணையத்தில் மட்டுமே பிரச்சனை ஆகும். ஆனால் இந்திய அணிக்குள் எந்த விதமான பிரச்சனையையும் ஏற்படுத்தாது என்று கூறுகிறார்கள் .பீப் சாப்பிட்ட விஷயம் பிரச்சனை இல்லை என்றாலும் கூட, கொரோனா விதிகளை மீறியதாக இவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

Story first published: Sunday, January 3, 2021, 10:24 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+