Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி நேரத்தில் வந்த சிக்கல்?.. முதல் ஒருநாள் போட்டி.. இந்திய ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம் - விவரம்!

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.

இதனை டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலையும், ஆன்லைனில் Fancod செயலியிலும் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓப்பனிங்கிற்கு யார்?

ஓப்பனிங்கிற்கு யார்?

ஷிகர் தவான் தலைமையில் இளம் படை இந்த தொடரில் களமிறங்குவதால், ப்ளேயிங் 11 மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. ஓப்பனிங்கில் கேப்டன் ஷிகர் தவானுடன் களமிறங்க இஷான் கிஷான், ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் என 3 தேர்வுகள் உள்ளன. ஆனால் வலது - இடது காம்பினேஷன்படி, இஷான் கிஷான் ஒதுக்கப்படலாம்.

மிடில் வரிசை

மிடில் வரிசை

மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா ஆகியோர் பலமான வரிசையாக உள்ளனர். இதில் தீபக் ஹூடா டாப் ஆர்டரில் சிறப்பாக செயல்படுவதால் முதல் விக்கெட்டிற்கு களமிறக்கப்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன. ஹர்திக் பாண்ட்யா இல்லாததால், வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லை என்ற சூழல் உள்ளது.

ஜடேஜா இல்லை

ஜடேஜா இல்லை

துணைக்கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு கடைசி நேரத்தில் மூட்டுப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முற்றிலும் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரின் இடத்தில் அக்‌ஷர் பட்டேல் விளையாடவுள்ளவுள்ளார். மற்றொரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் இடம்பெற்றுள்ளார்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் ஷர்துல் தாக்கூர் அணிக்குள் கொண்டு வரப்படவுள்ளார். ஹர்திக் பாண்ட்யா இல்லாததால் ஷர்துல் லோயர் ஆர்டரில் ஒரு பேட்ஸ்மேனாகவும் ஜொலிப்பார். அதே சமயம் பந்துவீச்சிலும் உதவுவார். முகமது சிராஜ் முதன்மை பவுலராக சேர்க்கப்படுவார். 3வது பவுலருக்கான தேர்வில் தான் பிரஷித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் சிங் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

இங்கிலாந்து தொடரின் போது பிரஷித் கிருஷ்ணாவின் பந்துவீச்சு சற்று சொதப்பலாக இருந்தது. இதே போல டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங்கை ஒருநாள் கிரிக்கெட்டிலும் பயன்படுத்தி பார்க்க டிராவிட் ஆர்வமாக உள்ளார். எனவே இன்று அவர் அறிமுகமாவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

Story first published: Friday, July 22, 2022, 14:21 [IST]
Other articles published on Jul 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+