
ப்ளேயிங் 11 திட்டம்
முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என வீரர்கள் சொதப்பியதால் 2வது போட்டியின் ப்ளேயிங் 11-காக அதிரடி மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. ஓப்பனிங்கை பொறுத்தவரை கே.எல்.ராகுடன் சேர்ந்து ஷிகர் தவான் மீண்டும் களமிறங்கவுள்ளனர். மிடில் ஆர்டரில் பேட்டிங் பலவீனமாக இருப்பதால், அதனை நிரப்ப சூர்யகுமார் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்படவுள்ளார்.

என்ன காரணம்
லோயர் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், வெங்கடேஷ் ஐயர் என அடுத்தடுத்து 2 அதிரடி ஆட்டக்காரர்கள் உள்ளனர். அவர்களின் இயற்கையான ஆட்டமே அதிரடி காட்டுவது தான் என்பதால் மிடில் ஆர்டரில் இந்திய அணியை மீட்க முடியாது. எனவே வெங்கடேஷ் ஐயரை நீக்கவுள்ளனர். மேலும் அவருக்கு பவுலிங் வாய்ப்பும் கொடுக்கப்படாமல் உள்ளதால், முழு நேர பேட்ஸ்மேனை கொண்டு வருவது சரியான திட்டம் தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஷர்துலின் இடம் இல்லை
இதே போல மற்றொரு ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரும் நீக்கப்படவுள்ளார். ஷர்துல் தாக்கூர் கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்தார். எனினும் அவரின் முக்கிய பணியான பவுலிங்கில் ஓவருக்கு சராசரியாக 7 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். எனவே அவரை நீக்கவிட்டு முழு நேர பவுலரான முகமது சிராஜிற்கு வாய்ப்பு கொடுக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஷர்துலை நீக்கினாலும் கூடுதலாக பேட்ஸ்மேன் வருவதால் இந்திய அணி சமாளித்துவிடும்.

இந்திய ப்ளேயிங் 11
கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அஸ்வின், புவனேஷ்வர் குமார், பும்ரா, முகமது ஷமி, யுவேந்திர சஹால்


Click it and Unblock the Notifications











