Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே போட்டியில் இத்தனை மாற்றமா..? 2வது டி20 போட்டியில் இந்திய அணி ப்ளேயிங் 11... முழு பட்டியல் இதோ!

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் ப்ளேயிங் 11 குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற சூழலில் இன்று 2வது போட்டி நடைபெறுகிறது.

 2வது டி20 போட்டி

2வது டி20 போட்டி

இந்த போட்டியில் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்களை பார்க்கலாம். ஏனென்றால் முதல் டி20 போட்டியின் போது முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் 2வது போட்டியில் மீண்டும் வருவதால், இளம் வீரர்கள் வெளியேற்றப்படவுள்ளனர். இந்நிலையில் அந்த மாற்றங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

பேட்டிங் மாற்றங்கள்

பேட்டிங் மாற்றங்கள்

பேட்டிங்கில் விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் உள்ளே வருவதால் ஓப்பனிங்கில் இஷான் கிஷான் மற்றும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடி வந்த தீபக் ஹூடா வெளியேற்றப்படலாம். கோலி ஓப்பனிங்கிலும், பண்ட் மிடில் ஆர்டரிலும் விளையாடுவார்கள்.

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சு மாற்றம்

பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவீந்திர ஜடேஜா அணிக்குள் வருவதால் அக்‌ஷர் பட்டேல் நீக்கப்படலாம். இதே போன்று சீனியர் வீரர் ஜஸ்பிரித் பும்ரா வருவதால் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் வெளியேறலாம். 4 முதல் 5 மாற்றங்கள் வரை நிச்சயம் செய்யப்படும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Recommended Video

Zimbabwe செல்ல உள்ள india அணி! IND vs ZIM *Cricket
ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுவேந்திர சஹால்

Story first published: Saturday, July 9, 2022, 16:02 [IST]
Other articles published on Jul 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+