Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2வது டி20ல் ஸ்டார் வீரர் நீக்கம்.. இந்திய அணிக்கு வரும் 4வது ஸ்பின்னர்.. ப்ளேயிங் 11 சூப்பர் மாற்றம்

செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ள நிலையில் 2வது போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.

ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

முதல் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் களமிறங்கியிருந்தார். இதே போல 3 ஸ்பின்னர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று கூடுதலாக 4வது ஸ்பின்னர் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. டாப் ஆர்டரை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அப்படியே இருக்கவுள்ளனர்.

ஸ்ரேயாஸ் நீக்கம்

ஸ்ரேயாஸ் நீக்கம்

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக சொதப்பலை சந்தித்து வருகிறார். கடைசி 5 போட்டிகளில் அவரின் ஸ்கோர்கள் 14, 4, 0, 28, 0 மட்டுமே ஆகும். எனவே இனியும் அவருக்கு வாய்ப்பு தர வேண்டாம் என ரோகித் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு மாற்றாக தீபக் ஹூடா களமிறக்கப்படலாம்.

கவனம் ஈர்த்த ஹூடா

கவனம் ஈர்த்த ஹூடா

இந்திய அணிக்காக சமீபத்தில் அறிமுகமான தீபக் ஹூடா டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என அனைத்து இடங்களிலும் அதிரடி காட்டுகிறார். இதுமட்டுமின்றி ஒரு சுழற்பந்துவீச்சாளராகவும் அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். எனவே டி20 உலகக்கோப்பைக்கே அவர் பயன்படுவார் என்பதால், இனி தொடர்ச்சியாக வாய்ப்பு தரப்படவுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

வெஸ்ட் இண்டீஸுடனான 2வது டி20 போட்டி நடைபெறும் மைதானம் மிகவும் குறைந்த ஸ்கோர் வரக்கூடிய பிட்ச் ஆகும். இங்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்தியா 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும். ஒருவேளை தீபக் ஹூடா அணிக்கு வந்தால், 4வது ஸ்பின்னராக செயல்படுவார். இல்லையெனில் ஒரு ஸ்பின்னர் நீக்கப்பட்டு, கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

Story first published: Monday, August 1, 2022, 13:12 [IST]
Other articles published on Aug 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+