Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவங்கதான் ஆட போறாங்க.. ஆஸி.யின் சூழ்ச்சிக்கு இடையே திமிறி எழும் இந்திய அணி.. பிளேயிங் 11 பின்னணி

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட போகும் இந்திய அணி வீரர்களின் உத்தேச லிஸ்ட் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான கிரிக்கெட் தொடர் இப்போதுதான் உண்மையில் தீவிரம் அடைந்துள்ளது. இரண்டு அணிகளும் களத்தில் மிகவும் நட்பாக நடந்து கொண்ட நிலையில் தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையில் கொஞ்சம் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் கொரோனா விதிகளை மீறியதாக கூறி ஆஸ்திரேலிய அணி அழுத்தம் கொடுத்து வருகிறது. ரோஹித் சர்மா உட்பட 5 வீரர்களை எப்படியாவது பயிற்சி செய்ய விடாமல் தடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் நினைக்கிறது.

மோசம்

மோசம்

ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் ஆகிய ஐந்து வீரர்களும் கொரோனா விதிகளை மீறிவிட்டனர். இதனால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறி வருகிறது. ஆனால் இவர்களுக்கு கொரோனா சோதனை செய்து, கொரோனா இல்லை என்பதை பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

பயிற்சி

பயிற்சி

இந்திய வீரர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இதனால் இந்திய வீரர்கள் யாரும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். இதனால் சிட்னிக்கு இந்திய வீரர்கள் பறந்துள்ளனர்.

எப்படி

எப்படி

அதன்படி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆட போகும் இந்திய அணி வீரர்களின் உத்தேச லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்திய அணியில் மூன்று முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. ஒரே ஒரு மாற்றம் மட்டும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மாற்றம்

மாற்றம்

இந்திய அணிக்குள் அதன்படி ரோஹித் சர்மா, கே. எல் ராகுல் வர உள்ளனர். இன்னொரு பக்கம் நடராஜன், ஷரத்துல் தாக்கூர் இரண்டு பேரில் யாரை களமிறக்கலாம் என்று ஆலோசனை நடந்து வருகிறது. அடுத்த டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் ஆட மாட்டார்கள்.

ஆடவில்லை

ஆடவில்லை

அதன்படி மூன்றாவது டெஸ்டில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், ரஹானே, புஜாரா, பண்ட், கே. எல் ராகுல், ஜடேஜா, அஸ்வின், பும்ரா, சிராஜ், நடராஜன் (அல்லது ஷரத்துல்) ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

பயிற்சி

பயிற்சி

இதில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், பண்ட் ஆகியோரை எப்படியாவது ஆட விடாமல் தடுக்கலாம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. ஆனால் இவர்கள் மூவருமே இந்திய அணியில் அடுத்த போட்டியில் ஆட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, January 4, 2021, 11:28 [IST]
Other articles published on Jan 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+