Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதல் டி20க்கான இந்திய ப்ளேயிங் 11... முக்கிய வீரரை கழட்டிவிடும் ரோகித்.. முழு விவரம் இதோ!

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

IND vs ENG 1st T20: எப்படி இருக்கும் Predicted Playing 11? | Aanee's Appeal | *Cricket

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் 2 - 2 என சமனில் முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது.

முதல் டி20

முதல் டி20

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி நாளை ( ஜூலை 7) தொடங்குகிறது. 2வது டி20 போட்டி ஜூலை 9ம் தேதியும், 3வது டி20 போட்டி ஜூலை 11ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடரில் ஏமாற்றிய இந்திய அணி, டி20 தொடரில் கம்பேக் தர வேண்டும் என தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்திய படை

இந்திய படை

இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய மெயின் அணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக அயர்லாந்து தொடரில் பங்கேற்ற அதே இந்திய அணி, இங்கிலாந்துடன் முதல் டி20 போட்டியில் விளையாடுகிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரோகித் சர்மா, இந்த அணியை வழிநடத்துகிறார்.

 அணி விவரம்

அணி விவரம்

இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11 கணிக்கப்பட்டுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் வழக்கம் போல் ஓப்பனிங் ஆடுவார்கள். அயர்லாந்துக்கு எதிராக 77 ரன்களை அடித்த சஞ்சு சாம்சனுக்கு 3வது இடமும், சூர்யகுமார் யாதவுக்கு 4வது இடமும் கிடைக்கும் எனத் தெரிகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பி வருவதால், தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

அணியின் லோயர் ஆர்டரில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.பந்துவீச்சை பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் ஆகியோர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். 3வது பவுலராக ஆவேஷ் கானா? அல்லது உம்ரான் மாலிக்கா? என்ற குழப்பம் நீடிக்கிறது. ஒரே ஒரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் மட்டும் வாய்ப்பு பெற்றுள்ளார்.

Story first published: Wednesday, July 6, 2022, 19:40 [IST]
Other articles published on Jul 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+