கண்ணா இது என் டேர்ன்.. ரிஷப் பண்ட்-க்கு ஸ்பெஷல் வாய்ப்பு.. 3வது டி20க்கான ப்ளேயிங் 11 மாற்றங்கள்!
இந்தூர்: தென்னாப்பிரிக்க அணியுடனான 3வது டி20 போட்டிக்கான ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா முக்கிய மாற்றங்களை செய்யவுள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா ஏற்கனவே 2 வெற்றிகளுடன் கைப்பற்றியுள்ளது.
வைட் வாஷ் செய்வதற்கான கடைசி டி20 போட்டி இன்று இரவு இந்தூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய ப்ளேயிங் 11
இந்த தொடரை ஏற்கனவே இந்திய அணி கைப்பற்றிவிட்டதாலும், டி20 உலகக்கோப்பை நெருங்கிவிட்டதாலும் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாய்ப்பின்றி இருக்கும் வீரர்கள் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படவுள்ளனர்.

ரிஷப் பண்ட்
டி20 உலகக்கோப்பை அணியில் ரிஷப் பண்ட் உள்ள போதும், அவருக்கு தென்னாப்பிரிக்க தொடரில் பெரியளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ஓப்பனிங் வீரராக ரிஷப் பண்ட் தான் விளையாடுவார் எனத்தெரிகிறது. இதே போல விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் களமிறக்கப்படவுள்ளார்.

ஸ்ரேயாஸ்-க்கு வாய்ப்பு
இந்திய அணியின் பேட்டிங்கில் எந்தவொரு வீரருக்கு காயம் ஏற்பட்டாலும், அடுத்து இருக்கும் ஒரே ஒரு மாற்று ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் தான். ஆனால் அவர் பெரியளவில் பயிற்சி பெறவில்லை. எனவே இந்த கடைசி டி20 மற்றும் அடுத்து வரவுள்ள 3 ஒருநாள் போட்டி தொடரையும் பயன்படுத்தி அவர் தயாராகிக்கொள்ள வேண்டும்.

சிராஜ் கம்பேக்
இந்தூர் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு தான் சாதகமாக இருக்கும். எனவே 4வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜ் விளையாட அதிக வாய்ப்பு உள்ளன. அக்ஷர் பட்டேல் விளையாடுவதால், யுவேந்திர சாஹல் இன்றும் வாய்ப்பின்றி பெஞ்ச்-ல் அமரலாம்.

ப்ளேயிங் 11 கணிப்பு
ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக், அக்ஷர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், தீபக் சஹார்


Click it and Unblock the Notifications