For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆடாம ஜெயிச்சோமடா.. இந்தியாவை காப்பாற்றிய நியூசிலாந்து.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு தகுதி

அகமதாபாத்: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியாமல் இந்திய அணி தவித்து வரும் சூழலில் நான் இருக்கிறேன் என வந்து காப்பாற்றியுள்ளது இலங்கை அணி.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது.

இதன்பின்னர் களமிறங்கிய இந்திய அணி எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்பது போல 571 ரன்களை விளாசியது. சுப்மன் கில் 128 ரன்களும், விராட் கோலி 186 ரன்களும் அடிக்க இந்தியா 91 ரன்கள் முன்னிலை பெற்றுவிட்டது.

இக்கட்டான நிலைமை

இக்கட்டான நிலைமை

என்னதான் இரு அணிகளும் பேட்டிங் சிறப்பாக செய்தாலும் முதல் இன்னிங்ஸை முடிப்பதற்கே 4 நாட்களை எடுத்துக்கொண்டனர். இதனால் 5வது நாளில் தான் 2வது இன்னிங்ஸை முடித்தாக வேண்டும். இந்த இக்கட்டான சூழலிலும் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனென்றால் இதில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என இருந்தது.

மகிழ்ச்சியான செய்தி

மகிழ்ச்சியான செய்தி

இந்நிலையில் தற்போது வெல்லாமலேயே இறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள இந்திய அணி ஒருவேளை தோற்றுவிட்டால், 3வது இடத்தில் உள்ள இலங்கைக்கு தான் வாய்ப்பு இருந்தது. அந்த அணி நியூசிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும். அதில் 2 போட்டிகளிலுமே வென்றால் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறும். ஒன்றில் தவறவிட்டால் கூட இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கும்.

நியூசிலாந்து உதவி

நியூசிலாந்து உதவி

அந்தவகையில் நியூசிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி போராடி தோல்வியடைந்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 355 ரன்களை அடிக்க, நியூசிலாந்து அணி 373 ரன்களை குவித்தது. இதனால் 18 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை மீண்டும் 302 ரன்களுக்கு அவுட்டானது. இதனால் 284 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து டி20 கிரிக்கெட்டை ஆடியது.

பரபரப்பு நிமிடங்கள்

பரபரப்பு நிமிடங்கள்

ஒருகட்டத்தில் அந்த அணி வெற்றி பெற 19 ஓவர்களில் 124 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. அப்போது பொறுப்புடன் ஆடிய கேப்டன் வில்லியம்சன் சீரான வேகத்தில் சதம் அடித்தார். அவருடன் சேர்ந்து டேரில் மிட்செல் 86 பந்துகளில் 81 ரன்களை விளாசினார். ஒருபுறம் 7 விக்கெட்கள் சரிய, கடைசி 9 பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற சூழலில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என அந்நாட்டு ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள் தான் அதிகம் பிரார்த்தனை செய்து வந்தனர்.

ரசிகர்கள் நிம்மதி

ரசிகர்கள் நிம்மதி

கடைசி பந்தில் ஒரு ரன் தேவை என்ற சூழலில் நியூசிலாந்து அணி த்ரில் வெற்றி பெற்றது. கடைசி வரை தூண் போல நிலைத்து நின்று ஆடிய கேன் வில்லியம்சன் 194 பந்துகளில் 121 ரன்களை விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Story first published: Monday, March 13, 2023, 12:28 [IST]
Other articles published on Mar 13, 2023
English summary
Team India qualify for WTC Final 2023, after New Zealand gets thrill victory against srilanka in 1st Test
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+