Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானை முந்திய இந்திய அணி.... அதுவும் வடிவ கிரிக்கெட்டிலுமா??.. ரசிகர்கள் ஆச்சரியம்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

Recommended Video

Pakistan-ஐ முந்திய Indian Team! ICC Ranking-ல் உச்சம் | Aanee's Appeal | *Cricket

இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 11 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து விளையாடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி 111 ரன்களை எடுத்து வெற்றி கண்டது.

இந்திய அணியின் வெற்றி

இந்திய அணியின் வெற்றி

இந்நிலையில் இந்த வெற்றியின் மூலம் ஐசிசி புள்ளிப்பட்டியலில் இந்திய அணி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்துடன் டி20 தொடரை கைப்பற்றிய சூழலில் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. எனவே ஐசிசி ODI புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி புள்ளிப்பட்டியல்

ஐசிசி புள்ளிப்பட்டியல்

இந்த போட்டிக்கு முன்பு வரை இந்திய அணி 105 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருந்தது. பாகிஸ்தான் அணி 106 ரன்களுடன் 3வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 108 புள்ளிகளை பெற்று பாகிஸ்தானை வீழ்த்தி முன்னேறியுள்ளது இந்திய அணி. இதுமட்டுமல்லாமல் மற்றொரு புதிய ரெக்கார்ட்-ம் உருவாகியுள்ளது.

புதிய சாதனை

புதிய சாதனை

ஐசிசி-ன் மூன்று வடிவ கிரிக்கெட் தரவரிசை பட்டியலிலும் டாப் 3 இடங்களில் இருக்கும் ஒரே அணி இந்திய அணி மட்டுமே ஆகும். ஒருநாள் கிரிக்கெட்டில் 3வது இடமும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது இடத்திலும் உள்ளது. டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இந்திய அணி டாப் இடத்தில் உள்ளது.

உலகக்கோப்பை கனவு

உலகக்கோப்பை கனவு

வரும் நவம்பர் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் வரவுள்ள சூழலில் டி20 போட்டிகளில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதிலும் வெற்றி பெற்றுவிட்டால், இந்திய அணி முழுமையாக தயாராகிவிடும்.

Story first published: Wednesday, July 13, 2022, 14:02 [IST]
Other articles published on Jul 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+