Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அட இவ்ளோ பெரிய சிக்கல் இருக்கு”.. ஆசிய கோப்பை இறுதிக்கு இந்தியா செல்ல என்ன வழி.. முழு விவரம் இதோ!

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு இந்திய அணியால் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு செல்ல முடியுமா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Recommended Video

Asia Cup Super 4: Pakistan-க்கு எதிரான India-வின் தோல்விக்கு என்ன Reasons? | *Cricket

மொத்தம் 6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் பரபரப்பு கட்டத்தை எட்டி வருகிறது.

நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் முக்கியமான போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தி அசத்தியது.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்திய நிலையில் அதே வித்தியாசத்தில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியுள்ளது. இதனால் இனி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முடியுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

என்ன செய்யனும்

என்ன செய்யனும்

இந்திய அணி அடுத்ததாக இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றால் 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம். அதுவும் அதிக ரன் ரேட்டுடன் வெற்றி பெறுவது மிக முக்கியமான ஒன்று.

சிக்கல் நிலை

சிக்கல் நிலை

பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 அணிகளுமே சூப்பர் 4 சுற்றில் ஒரு வெற்றியுடன் உள்ளனர். இந்த இரண்டு அணிகளுமே அடுத்துள்ள 2 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும். அந்தவகையில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் எந்தவித சந்தேகமும் இன்றி முன்னேறிவிடுவார்கள்.

மூன்று வடிவ போட்டி

மூன்று வடிவ போட்டி

பாகிஸ்தான் அணி அடுத்ததாக ஆஃப்கானிஸ்தானுடன் வெற்றி பெற்று, இலங்கையிடம் தோல்வியடைந்தால் 4 புள்ளிகளையே பெறும். இலங்கை அணியோ இந்தியாவிடம் தோல்வியடைந்து, பாகிஸ்தானுடன் வெற்றி பெற்றால் 4 புள்ளிகளை பெறும். இந்திய அணி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 4 புள்ளிகளை பெறும். இதன் மூலம் 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருப்பார்கள்.

ரன்ரேட்

ரன்ரேட்

இப்படி ஒருவேளை இருந்தால் நெட் ரன்ரேட் கணக்கீடு எடுத்துக்கொள்ளப்படும். தற்போது வரை இலங்கை அணிக்கு நெட் ரன் ரேட் +0.589 மற்றும் பாகிஸ்தான் அணிக்கு +0.126 உள்ளது. ஆனால் இதில் தான் இந்தியா வெறும் -0.126 என உள்ளனர். எனவே இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் அடுத்த 2 போட்டிகளிலும் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.

Story first published: Monday, September 5, 2022, 20:13 [IST]
Other articles published on Sep 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+