Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு தோல்வி.. மொத்த ஆசை க்ளோஸ்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா செல்லுமா?கவலையில் ரோகித்

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ளதால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரும் சிக்கல் உண்டாகியுள்ளது. மற்றொரு ஐசிசி கோப்பையை இழக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது. இதன் பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா சிறப்பான பேட்டிங்கால் 197 ரன்களை குவித்தது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

இதன் மூலம் 88 ரன்கள் பின் தங்கிய சூழலில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இந்த முறையாவது பேட்டிங்கில் சோபிக்குமா என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது. ரோகித், கோலி, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் என அனைவரும் சொதப்ப சட்டீஸ்வர் புஜாரா மட்டுமே 59 ரன்கள் அடித்து காப்பாற்றினார். இதனால் வெறும் 163 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

சிக்கலில் ரோகித் சர்மா

சிக்கலில் ரோகித் சர்மா

வெறும் 76 ரன்கள் என்ற குறைவான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி எந்தவித பதற்றமும் இன்றி விளையாடி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு அதிகாரப்பூர்வமாக முன்னேறியுள்ளது. ஆனால் இந்தியாவின் நிலைமை தான் பரிதாபமாகியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 60.29 புள்ளிகளுடன் இந்திய அணி 2வது இடத்தில் இருந்து வருகிறது. 3வது இடத்தில் இலங்கை அணி நெருங்கி வருகிறது. இறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றால் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும். சமனில் முடித்தால் கூட வாய்ப்பு 50% சதவீதமாக குறைந்துவிடும்.

நெருங்கி வரும் இலங்கை

நெருங்கி வரும் இலங்கை

ஏனென்றால் இலங்கை அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. ஒருவேளை இந்திய அணி 4வது டெஸ்டிலும் தோற்று தொடர் சமனில் முடிந்து, இலங்கை அணி நியூசிலாந்தை 2 - 0 என வீத்தினால் இந்தியா வேறு வழியே இல்லாமல் வெளியேறிவிடும். எனினும் அதனை தவிர்ப்பதற்காக ரோகித் அதிரடி முடிவுகளை எடுக்க வேண்டும்.

4வது டெஸ்ட் எங்கு?

4வது டெஸ்ட் எங்கு?

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9ம் தேதியன்று தொடங்கவுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு இந்த மைதானத்தில் நல்ல ரெக்கார்ட் இருப்பதால் அவற்றினை பயன்படுத்தி வெற்றி பெற நல்ல சூழல் அமைந்துள்ளது.

Story first published: Friday, March 3, 2023, 15:21 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+