Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் நின்றுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

5வது டெஸ்ட்

5வது டெஸ்ட்

இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 416 ரன்களும், இங்கிலாந்து அணி 284 ரன்களையும் எடுத்தது. ஓப்பனிங் வீரர் சுப்மன் கில் (4), ஹனுமா விஹாரி 11, விராட் கோலி 20 ரன்கள் என அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த ரிஷப் பண்ட் - புஜாராவுடன் சேர்ந்து ரன்களை உயர்த்தினார்.

2வது இன்னிங்ஸில் சொதப்பல்

2வது இன்னிங்ஸில் சொதப்பல்

ரிஷப் பண்ட் 57 ரன்களையும் சட்டீஸ்வர் புஜாரா 66 ரன்களையும் குவித்தனர். எனினும் இவர்களுக்கு பின்னர் யாரும் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு சுருண்டது. ஏற்கனவே 132 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், இந்தியா

378 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கமே அதிரடியாக இருந்தது ஓப்பனிங் வீரர்கள் அலெக்ஸ் லீஸ் மற்றும் ஜாக் க்ராவ்லே ஆகியோர் டி20 கிரிக்கெட் போன்று விளாசினர். லீஸ் (56), ஜாக் க்ராவ்லே (46) என அடிக்க முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 107 ரன்களை சேர்த்துவிட்டது.

மீண்டும் பார்ட்னர்ஷிப்

மீண்டும் பார்ட்னர்ஷிப்

எனினும் இதன்பின்னர் வந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோ ஜோடி மீண்டும் ஒரு தரமான பார்ட்னர்ஷிப்பை அமைத்துவிட்டனர். இவர்கள் இருவரும் சேர்ந்து மலமலவென அரைசதம் அடிக்க, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 109 - 3 என்றதில் இருந்து 259 - 3 என்ற நிலைக்கு சென்றுள்ளது. 4ம் நாளின் முடிவில் ஜோ ரூட் 76 ரன்கள் மற்றும் ஜானி பேர்ஸ்டோ 72 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Story first published: Monday, July 4, 2022, 23:32 [IST]
Other articles published on Jul 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+