Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோட் சூட்டில் ஜொலித்த இந்திய வீரர்கள்.. டி20 உலகக்கோப்பைக்காக ஆஸ்திரேலியா பயணம்.. ஆனால் ஒரே ஒரு குறை!

மும்பை: டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

3 போட்டிகள் கொண்ட அந்த டி20 தொடரில் கடைசிப்போட்டியில் மட்டும் சொதப்பியதால் 2- 1 என இந்திய வீரர்கள் வென்றனர்.

டி20 உலகக்கோப்பை தொடர்

டி20 உலகக்கோப்பை தொடர்

இந்நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கையாக டி20 உலகக்கோப்பை தொடருக்காக புறப்பட்டுள்ளனர். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள அந்த கிரிக்கெட் திருவிழா வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. எனவே இன்று அதிகாலை 3 மணி அளவில் இந்திய வீரர்கள் ரசிகர்களின் ஆரவாரத்துடன் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர்.

கலக்கல் புகைப்படங்கள்

கலக்கல் புகைப்படங்கள்

ஐசிசி தொடர்களுக்கு செல்லும் போது வீரர்கள் கோட் சூட்டில் செல்வது வழக்கம். அந்தவகையில் ஒவ்வொரு வீரரும் பிசிசிஐ-ன் முத்திரை பதித்த கோட் சூட்-களுடன் ஜொலித்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. குறிப்பாக விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோரின் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

ஒருவர் இல்லை

ஒருவர் இல்லை

இந்த 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு மட்டும் காயம் ஏற்பட்டு விலகியுள்ளார். அவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படாததால், தற்போதைக்கு 14 பேர் மட்டுமே ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுள்ளனர். பேக் அப் வீரர்களுடன் அந்த மாற்று வீரரும் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு சென்று விடுவார் எனக் கூறப்படுகிறது.

பயிற்சிகள்

பயிற்சிகள்

இந்திய வீரர்கள் அனைவருமே நேரடியாக பெர்த் மைதானத்திற்கு செல்லவுள்ளனர். அங்கு ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடன் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். அந்நாட்டில் மிக அதிகமாக வேகமும், பவுன்ஸும் கொண்ட மைதானமாக பெர்த் பார்க்கப்படுகிறது. எனவே அங்கு பயிற்சி பெற்றால் சிறப்பாக இருக்கும் என்ற நோக்கில் சென்றுள்ளனர்.

Story first published: Thursday, October 6, 2022, 16:39 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+