Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பையை தேசத்திற்காக அர்ப்பணிக்கின்றேன்.. ரசிகர்களுக்காக வென்றோம்.. ரோகித் நெகிழ்ச்சி

டி20 உலக கோப்பையை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இதன் மூலம் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சாதனையை இந்தியா படைத்தது. இந்த நிலையில் மும்பை மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தை பேசிய ரோஹித் சர்மா இந்த உலக கோப்பையை ஒட்டுமொத்த தேசத்திற்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார்.

Indian Cricket Team rohit sharma victory parade


இறுதிப்போட்டி முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு இந்தியா வந்ததற்கு எங்களுக்கு சிறப்புமிக்க வரவேற்பை இந்திய மக்கள் எங்களுக்கு வழங்கியிருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். குறிப்பாக மும்பை வந்து இறங்கியதில் இருந்து ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்ததாக குறிப்பிட்ட ரோஹித் சர்மா, உலக கோப்பை வென்று எப்போது திரும்பினாலும் மும்பை எங்களை ஏமாற்றாது என்று கூறினார்.

2007 ஆம் ஆண்டு வென்ற டி20 உலக கோப்பை ஸ்பெஷலா? 2024 ஆம் ஆண்டு என்ற உலகக்கோப்பை உங்களுக்கு ஸ்பெஷலா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த போது ரோகித் சர்மா 2007 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக டி20 உலககோப்பை வென்றது. அதனை நாங்கள் என்று உலகத்திற்கு எங்களுடைய திறமையை காட்டிலும் அது என்னுடைய முதல் உலகக்கோப்பை என்பதால் அது எனக்கு ஸ்பெஷல் என்று கூறினார்.

இதேபோன்று ஒவ்வொரு உலகக்கோப்பை வெற்றியும் எங்களுக்கு ஸ்பெஷல் தான் என்று கூறிய ரோகித் சர்மா 2011 உலகக் கோப்பை,2013 சாம்பியன்ஸ் கோப்பை அனைத்தும் என் மனதில் இருந்து என்றும் நீங்காது என்றும் கூறினார். இதை போன்று கடைசி ஓவர் வீசிய ஹர்திக் பாண்டியாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறப்பாக பந்து வீசி எங்களுக்கு வெற்றியை தேடி கொடுத்ததாக பாராட்டிய ரோகித் சர்மா சூரியகுமார் யாதவின் கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டதாகவும் பாராட்டினார்.

இந்த தொடரில் ஒரு முறை கூட தோல்வியை தழுவாமல் வெற்றி பெற்றது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, இப்படி ஒரு அணி கிடைத்ததற்கு எனக்கு அதிர்ஷ்டம் என்று நான் கருதுகிறேன். நான் ஒன்று இரண்டு வீரர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்த அணியும் கடும் பயிற்சி செய்து இந்த உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்ததாக ரோகித் சர்மா பாராட்டினார்.

Story first published: Thursday, July 4, 2024, 21:35 [IST]
Other articles published on Jul 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+