கடைசி நேர ட்விஸ்ட்.. முதல் ஒருநாள் போட்டி.. ப்ளேயிங் 11ல் ரோகித் அடித்த பல்டி..இந்தியாவுக்கு நல்லதா
கவுகாத்தி: இலங்கை அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு தொடக்கமே பின்னடைவாக அமைந்துள்ளது. ப்ளேயிங் 11லும் ரோகித் சர்மா அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் கவுகாத்தியில் தொடங்கியுள்ளது. டி20 தொடரை 2 - 1 என கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு உள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஆனால் இது இந்திய அணிக்கு நல்லதே கிடையாது.

கடும் பின்னடைவு
கவுகாத்தி பிட்ச்-ஐ பொறுத்தவரையில் பேட்டிங்கிற்கு சொர்க்கமாகும். 300 ரன்கள் என்பதை சகஜமாக எதிர்பார்க்கலாம். ஆனால் இங்கு மாலை நேரத்தில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கும். எனவே 2வது பந்துவீசும் அணிக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம். எனவே முதலில் பந்துவீசும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். இதுவரையிலும் முதலில் பந்துவீசிய அணியே வெற்றியும் கண்டுள்ளது.

ஓப்பனிங் போராட்டம்
ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மாவுடன் யார் விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சமீபத்தில் இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானை புறகணித்துவிட்டு சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு தந்துள்ளனர். என்னதான் இஷான் அதிரடியாக விளையாடிய போதும், சுப்மன் கில் நிலையான ஃபார்மில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மிடில் வரிசை
மிடில் ஆர்டரை பொறுத்தவரையில் 3வது வீரராக வழக்கம் போல விராட் கோலி விளையாடுகிறார். 4வது இடத்திற்கு சூர்யகுமார் யாதவா அல்லது ஸ்ரேயாஸ் ஐயரா என்ற பெரும் விவாதம் இருந்தது. எனினும் கடந்தாண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் காட்டிய ஆட்டத்தை கருத்தில் கண்டு அவருக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் 5வது வீரராக இடம்பெற்றுள்ளார். 6வது இடத்தை ஹர்திக் பாண்ட்யா இறுதி செய்துள்ளார்.

பவுலிங் விவரம்
பவுலிங்கை பொறுத்தவரையில் 2 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்குகிறது. டி20 தொடரில் கலக்கிய யுவேந்திர சாஹல் மற்றும் அக்ஷர் பட்டேல் மீண்டும் ஜோடி சேர்கின்றனர். வேகப்பந்துவீச்சில் பும்ரா விலகியது பின்னடைவு தான். இதனால் சீனியர் வீரர் முகமது ஷமியுடன் இணைந்து இளம் வீரர்கள் முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவர்கள் தான் சீனியர்கள். அர்ஷ்தீப் இடதுகை பவுலர் ஆகும். ஆனால் அதிர்ச்சி தரும் வகையில் ஜம்மு எக்ஸ்பிரஸ் உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், யுவேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்


Click it and Unblock the Notifications