Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

18 ரன்களுக்கு ஆல் அவுட்.... எதிரணி எப்படி ஜெயித்தது தெரியுமா!

லண்டன்: இங்கிலாந்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் பெக்கன்ஹாம் அணி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எதிர்த்து விளையாடிய பெக்ஸ்லே அணி 12 நிமிடங்களில் 21 பந்துகளில் வெற்றி இலக்கை எட்டியது.

இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. அடுத்து டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.

team all out of 18 runs in england

இந்த நிலையில் அங்கு, கவுண்டிகளில் லீக் போட்டிகள் நடக்கின்றன. முதல் தர போட்டியான இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் 152 ஆண்டுகளாக விளையாடும் பெக்கன்ஹாம் கிரிக்கெட் அணியும், பெக்ஸ்லே கிரிக்கெட் அணியும் மோதின.

இதில் முதலில் விளையாடிய பெக்கன்ஹாம் 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. விளையாடிய 11 பேரில் 5 பேர் டக் அவுட்டாயினர். மூன்று பேர் அதிகபட்சமாக தலா 4 ரன்களை எடுத்தனர்.

அடுத்து விளையாடிய பெக்ஸ்லே அணி 3.3 ஓவர்களில், 12 நிமிடங்களில் 22 ரன்கள் எடுத்து வென்றது. இதில் 6 உபரி ரன்கள். இங்கிலாந்து கவுன்டியில் மிகவும் குறைந்த ஸ்கோர் இதுவாகும்.

Story first published: Tuesday, July 24, 2018, 13:37 [IST]
Other articles published on Jul 24, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+