மும்பை வாங்கடேவில் டெஸ்ட் சதம்: 15 ஆண்டு காத்திருப்பை நிறைவேற்ற தவறிய டெண்டுல்கர்
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை வாங்கடே மைதானத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் சதமடிப்பார் என்ற ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டார்.
சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கும் 200வது மற்றும் இறுதி டெஸ்ட் மும்பையில் நடைபெற்று வருகிறது. சச்சின் கடைசியாக சதமடித்தது 2011-ம் ஆண்டுதான்.
அத்துடன் மும்பை வாங்கடேவில் சதமடித்தது 1997 ஆம் ஆண்டுதான். 15 ஆண்டுகாலத்துக்குப் பின் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது சச்சின் சதமடிக்கமாட்டாரா என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
சரி மும்பை வாங்கடே மைதானத்தில் சச்சின் எத்தனை முறை சதத்தை கோட்டை விட்டிருப்பார் என பார்க்கலாம்

1993-ல் 78 ரன்கள்
1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 78 ரன்கள் எடுத்து அவுட் ஆனார் டெண்டுல்கர்

1994-ல் 85 ரன்கள்
1994ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி வாங்கடேவில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டியில் 8வது சதத்தை எட்டிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 85 ரன்களில் அவுட் ஆனார் டெண்டுல்கர்.

1997-ல் முதல் சதம்
1997ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 148 ரன்கள் அடித்தார் சச்சின். மும்பை மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம்.

2000-ல் 3 ரன்களில் கோட்டை
2000-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 97 ரன்களை வரை எட்டிப்பார்த்த சச்சின் சதத்தை தொடாமலேயே பெவிலியன் திரும்பினார்.

2001-ல் 76 ரன்கள்
2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மும்பையில் 76 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

2011-ல் 94
2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இதே மும்பை மைதானத்தில் 94 ரன்கள் எடுத்து 6 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார் சச்சின்.

2013-ல் 74 ரன்கள்
சச்சினின் 200வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகிவிட்டார் சச்சின்

15 ஆண்டுகால காத்திருப்பு
கடந்த 1997-க்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து இறுதி போட்டியிலாவது சதமடித்துவிடமாட்டாரா என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லையே மிஸ்டர் கிரிக்கெட் GOD!!


Click it and Unblock the Notifications