Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹாய் லாரா.. ஹாய் சச்சின்!!

டெல்லி: டெல்லி பெரோஷாகோட்லா மைதானம் நேற்று இரு இமயங்களைச் சந்திக்கும் பாக்கியத்தைப் பெற்றது - அவர்கள் பிரையன் லாரா மற்றும் சச்சின் டெண்டுல்கர்.

இருவரும் ஒரு காலத்தில் ரன் குவிப்பதில் பட்டையைக் கிளப்பியவர்கள் என்பதால் இருவரும் சேர்த்து பார்த்து ரசிகர்கள் பெரும் குஷியடைந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியும், டிரினிடாட் மற்றும் டொபாகோ அணியும் நேற்றைய கடைசி லீக் போட்டிகளில் முறையே பெர்த் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸைச் சந்தித்தன.

இதில் மும்பை அணிக்காக சச்சின் விளையாடினார். டிரினிடாட் அணியின் மென்டாராக பிரையன் லாரா செயல்படுகிறார்.

முதலில் வென்ற மும்பை

முதலில் வென்ற மும்பை

முதலில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

2வது போட்டியில் டொபாகோ வெற்றி

2வது போட்டியில் டொபாகோ வெற்றி

2வதாக நடந்த கடைசி லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது டொபாகோ.

எல்லையில் வைத்து லாராவை சந்தித்த சச்சின்

எல்லையில் வைத்து லாராவை சந்தித்த சச்சின்

சென்னை, டொபாகோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தபோது பவுண்டரி லைனுக்கு அருகே வைத்து லாரா வந்தார். அங்கு அவர் சச்சினை சந்தித்தார். இருவரையும் ஒரு சேரப் பார்த்த புகைப்படக்காரர்கள் வளைத்து வளைத்து அதைப் படம் பிடித்தனர். ரசிகர்களோ ஆரவாரித்தனர்.

சின்னதாக உரையாடல்

சின்னதாக உரையாடல்

இரு மாபெரும் வீரர்களும் பவுண்டரி லைனுக்கு அருகே நின்றபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

மறுபடியும் சந்திப்பார்கள்

மறுபடியும் சந்திப்பார்கள்

மும்பை மற்றும் டொபாகோ அணிகள் 2வது அரை இறுதிப் போட்டியில் வருகிற சனிக்கிழமை மோதவுள்ளன. அப்போது லாராவும், சச்சினும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Story first published: Thursday, October 3, 2013, 9:31 [IST]
Other articles published on Oct 3, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+