Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெண்டுல்கருக்கு சிறந்த ஐபிஎல் பேட்ஸ்மேனுக்கான விருது

மும்பை: 3வது ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருது நட்சத்திர வீரரும், மும்பை இந்தியன்ஸ் கேப்டனுமான சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைத்துள்ளது.

3வது ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் விருதுகள் வழங்கும் விழா நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. ஐபிஎல் ஊழல், மோடி மீதான குற்றச்சாட்டுக்கள் இந்த விழாவை கொஞ்சம் கூட பாதிக்கவில்லை என்பது விழாவைப் பார்த்தாலே தெரிந்தது.

இந்த விருதுகளில் டெண்டுல்கர் சிறந்த பேட்ஸ்மேனுக்கான விருதையும், சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் பிரக்யான் ஓஜாவும் பெற்றனர்.

இன்று 37வது பிறந்த நாளைக் கொண்டாடும் டெண்டுல்கர், 3வது ஐபிஎல் தொடரில் 570 ரன்களைக் குவித்துள்ளார். ஐந்து சதங்கள் இதில் அடக்கமாகும்.

சிறந்த பேட்ஸ்மேனுக்கான போட்டியில் டெண்டுல்கர் தவிர கல்லிஸ், ராபின் உத்தப்பா, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா ஆகியோரும் இருந்தனர்.

விருதுகள் முழு விவரம்

நடுவர் விருதுகள்

சிறந்த அறிமுக வீரர் - கீரன் போலார்ட்

சிறந்த பேட்ஸ்மேன்- டெண்டுல்கர்

சிறந்த பந்து வீச்சாளர் - பிரக்யான் ஓஜா

சிறந்த அதிரடி வீரர் - ஹர்பஜன் சிங்

ஸ்திரத்தன்மையுடன் ஆடிய வீரர் - ஜேக்கஸ் கல்லிஸ்

திருப்புமுனை வீரர் - பிரன்டன் மெக்கல்லம்

2009ன் திருப்புமுனை வீரர் - அனில் கும்ப்ளே

சிறந்த பீல்டர் - அப் டி வில்லியர்ஸ்

சிறந்த மைதானம்- சின்னச்சாமி மைதானம், பெங்களூர்

சிறந்த ஸ்ட்டிய அனுபவம் - டிஒய் பாட்டீல் ஸ்டேடியம், நவி மும்பை

ரசிகர் விருப்ப விருதுகள்

சிறந்த கேட்ச் - டேவிட் ஹஸ்ஸி

சிறந்த பேட்ஸ்மேன்- டெண்டுல்கர்

சிறந்த கேப்டன்- டெண்டுல்கர்

சிறந்த பந்து வீச்சாளர் - பிரக்யான் ஓஜா

சிறந்த வர்னணையாளர் - ரவி சாஸ்திரி

சிறந்த ஸ்டைல் வீரர் - ராபின் உத்தப்பா

ரசிகர்களின் விருப்ப வீரர் - கில்கிறைஸ்ட்

சிறந்த பீல்டர் - சுரேஷ் ரெய்னா

புள்ளிவிவர விருதுகள்

சிறந்த எக்கனாமிகல் பவுலர் - ஆர்.அஷ்வின்.

அதி வேக சதம் போட்டவர் - யூசுப் பதான்

பவுண்டரிகள் மூலம் அதிக ரன் குவித்தவர் - வீரேந்திர ஷேவாக்

ஐபிஎல் கேப்டன் விருது

எனது அணியில் இடம் பெற விரும்பும் சிறந்த இந்திய கிரிக்கெட் கேப்டன் விருது - கபில் தேவ்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+