சாதனை படைத்த சச்சினுக்கு 200 பேட்களைப் பரிசளித்த ரசிகர்கள்
வதோதரா: ஒரு நாள் போட்டியில் 200 ரன்கள் அடித்து சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் 200 பேட்களை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தினர்.
வதோதராவில் நடந்த நிகழ்ச்சியில் சச்சினிடம் இந்த பேட்கள் பரிசாக அளிக்கப்பட்டன.
ரசிகர்களின் இந்தப் பரிசுக்குப் பாராட்டு தெரிவித்த சச்சின் அவர்களின் இந்த ஆர்வத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும் அந்த பேட்களில் அவர் ஆட்டோகிராபும் போட்டார். பின்னர் இந்த பேட்களை இளம் வீரர்களுக்கு தனது பரிசாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
சூரத்தில் நடந்த டுவென்டி 20 காட்சிப் போட்டியில் விளையாடுவதற்காக வந்திருந்தார் சச்சின். அப்போது நடந்த நிகழ்ச்சியில் இந்த பேட்கள் பரிசளிக்கப்பட்டன.
Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications