Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஞாபகம் வருதே… ஞாபகம் வருதே..! சச்சின் இவங்களோட எப்படி சேர்ந்தார்..? வைரல் போட்டோ

மும்பை: மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின், தமது சமகால வீரர்களுடன் இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. தமது அன்டிலா வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவினை அவர் கொண்டாடினர்.

 Tendulkar spent time with his former teammates including yuvraj singh

விழாவில் திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், யூசுப் பதான், அஜித் அகர்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் அவர்கள் அனைவரும் ஒன்றாக குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். அந்த போட்டோவை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் சச்சின். அதில் தமது வாழ்நாள் அணி என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

இதனை சச்சின் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இவர்களை இப்படி ஒன்றாக ஒரு இடத்தில் பார்த்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் கூறி வருகின்றனர்.

யுவராஜ் சிங் தான் எடுத்த செல்பி போட்டோவை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பழமை பொன் போன்றது, ஆனால் யாரும் தங்கள் வயதை குறிக்கும் வகையில் ரொம்ப பழைமை இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Story first published: Wednesday, September 4, 2019, 22:07 [IST]
Other articles published on Sep 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+