கடைசியில் பின்வாங்கிய கோலி.. அணிக்குள் வந்த ரோஹித் சர்மா.. தேர்வுக்குழு செய்த அதிரடி!
டெல்லி: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் சீரிஸ் போட்டி நாளை தொடங்குகிறது. பேடிஎம் பிரிடம் சீரிஸ் ஆப் காந்தி - மண்டேலா என்று இந்த தொடர் அழைக்கப்படுகிறது.
நாளை விசாக்கப்பட்டினத்தில் இந்த முதல் போட்டி நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள்.

டெஸ்ட் எப்படி
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி, ரஹானே, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஸ்வின், ஜடேஜா, விர்த்திமான் சாஹா, இஷாந்த் சர்மா , முகமது சமி ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.

ரோஹித் வாய்ப்பு
இந்திய டெஸ்ட் அணியில் இதனால் ரோஹித் சர்மா வாய்ப்பை பெற்றுள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து ரோஹித் சர்மா புறக்கணிக்கப்பட்டு வந்தார். ஒருநாள் அணியில் நன்றாக விளையாடினாலும் டெஸ்ட் அணியில் அவர் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

பேட்டி
இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த விராட் கோலி, இந்திய அணியின் டெஸ்ட் பிரிவில் இடம் பிடிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா நீண்ட காலமாக காத்து இருந்தார். தற்போது அது நடந்து உள்ளது. அவர் இந்திய அணியின் தொடக்க வீரராக விருப்பப்பட்டபடியே களமிறங்குவார்.

அவரது ஸ்டைல்
அவர் மற்ற வீரர்களின் இடத்தை நிரப்ப வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவருடைய ஸ்டைலில் அவர் ஆடுவதைதான் நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் நடக்கும் இந்த மூன்று போட்டியிலும் ரோஹித் சர்மா விளையாடுவார், என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications