Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோடிக்கணக்கானவங்களுக்கு உத்வேகமா இருந்ததற்கு நன்றி... சச்சின் டெண்டுல்கருக்கு நன்றி சொன்ன பிசிசிஐ!

மும்பை : கடந்த 1989ல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இதே நாளில் தன்னுடைய முதல் போட்டியை விளையாடினார் சச்சின் டெண்டுல்கர்.

தொடர்ந்து 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடிய சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013ல் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அவரது முதல் போட்டியை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ள பிசிசிஐ, கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி

பாகிஸ்தானுக்கு எதிராக போட்டி

கடந்த 1989ல் பாகிஸ்தானிற்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற தொடரில் இதே நவம்பர் 15ம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுளாக மும்பை ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் தொடர்ந்து 24 வருடங்கள் கிரிக்கெட்டில் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

இறுதிப்போட்டி... 74 ரன்கள்

இறுதிப்போட்டி... 74 ரன்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். அவரை எதிரணியின் வாக்கர் யூனிஸ் அவுட் செய்தார். ஆனால் 24 வருடங்கள் கழித்து மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தனது இறுதிப்போட்டியில் 74 ரன்களை அடித்த சச்சின் டெண்டுல்கர், நர்சிங் டியோநரேன் பந்தில் அவுட்டானார்.

6 உலக கோப்பை போட்டிகள்

6 உலக கோப்பை போட்டிகள்

தன்னுடைய கேரியரில் 100 சதங்களை அடித்துள்ள ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படாமல் உள்ளது. மேலும் தன்னுடைய கேரியரில் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர், கடந்த 2011ல் உலக கோப்பை வெற்றிக் கூட்டணியிலும் இடம்பெற்றார்.

நினைவு கூர்ந்த பிசிசிஐ

நினைவு கூர்ந்த பிசிசிஐ

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் முதல் போட்டியை நினைவுக்கூறும் வகையில் பிசிசிஐ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அவரது முதல் மற்றும் இறுதிப்போட்டிகளின் புகைப்படங்களை இணைத்து, கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகமாக இருந்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.

Story first published: Sunday, November 15, 2020, 18:05 [IST]
Other articles published on Nov 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+