கிரிக்கெட் மேல எவ்ளோ விருப்பம், ஆர்வம்... அதை அவர்கிட்டதான் கத்துக்கிட்டேன்... படிக்கல் பாராட்டு
சென்னை : ஐபிஎல் போட்டிகளில் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதவுள்ளது ஆர்சிபி.
சென்னையில் இந்த போட்டி நடைபெறவுள்ளது. இதனிடையே கொரோனா பாதித்துள்ள அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிரிக்கெட்டின் மீது அதிகமான ஆர்வமும் விருப்பமும் விராட் கோலி கொண்டுள்ளதாகவும் அதை அவரிடம் தான் கற்றுக் கொண்டுள்ளதாகவும் படிக்கல் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பையை வெல்லாத ஆர்சிபி
ஐபிஎல் 2020 தொடரில் ப்ளே-ஆப்பிற்கு சிறப்பாக முன்னேறிய ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறைகூட அந்த அணி வெற்றி கொள்ளாத நிலையில், இந்த சீசனில் வெற்றி முனைப்பில் அணி வீரர்கள் காணப்படுகின்றனர்.

கோலி குறித்து படிக்கல் பாராட்டு
இந்நிலையில் கிரிக்கெட் மீது கேப்டன் விராட் கோலி அதிகமான விருப்பம் மற்றும் ஆர்வத்துடன் உள்ளதாகவும் அதை அவரிடம் இருந்து தான் கற்றுள்ளதாகவும் தேவ்தத் படிக்கல் பாராட்டு தெரிவித்துள்ளார். கோலியை யாரும் பின்புறம் இருந்து தள்ளவோ ஊக்குவிக்கவோ அவசியம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பின்பற்ற விரும்புகிறேன்
அவர் தன்னிடம் அதிகமான வேகத்தை கொண்டுள்ளதாகவம் நாட்டிற்காக விளையாடி வெற்றி கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் காணப்படுவதாகவும் குறிப்பட்டுள்ள படிக்கல், இந்த பயரை தான் நான் எனக்குள் கொண்டுவர விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி மோதல்
மேலும் கடந்த சீசனில் சிறப்பான வகையில் கற்றுக் கொள்ளும் முயற்சியில் தான் விளையாடியதாகவும் அதையே இந்த சீசனிலும் தொடர்ந்து ஆர்சிபியின் வெற்றிக்கு உதவ விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் வரும் 9ம் தேதி தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆர்சிபி மோதவுள்ளது.


Click it and Unblock the Notifications