சென்னை: இந்தியாவிற்கு எதிரான 2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய வீரர்களை ஆஸ்திரேலியா பீல்டர்கள் ஸ்டன் ஆக்கி உள்ளனர்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் இருந்து ஆட்டம் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

இந்திய அணி மாற்றம் இல்லாமல் அதே அணியுடன் களமிறங்கி உள்ளது. ரோஹித் சர்மா, கில், விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே எல் ராகுல் (கீப்பர்) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரிட் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ் ஆகியோர் களமிறங்கி உள்ளனர். அதே அணியுடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது. இன்று இந்திய அணியில் உலகக் கோப்பையில் முதல் சில போட்டிகளை விட வேறு எந்த போட்டியிலும் இந்திய அணி டீமை மாற்றவே இல்லை.
இன்று மேட்சில் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. சிராஜுக்கு பதிலாக அஸ்வின் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் சிராஜ் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் உள்ளனர்.
இந்தியா விக்கெட்: இந்திய அணி வேகமாக இன்று ஆட்டத்தை தொடங்கினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா வேகமாக ஆடினாலும் இன்னொரு பக்கம் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார்.
அதேபோல் வேகமாக பவுண்டரி சிக்ஸ் என்று ஆடிக்கொண்டு இருந்த ரோஹித் சர்மா 31 பந்தில் 3 சிக்ஸ் அடித்தார். 4 பவுண்டரி அடித்தார் . 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் தேவையின்றி கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த 4 போட்டிகளில் 2 அரைசதம், 2 சதம் அடித்தார். ஆனால் இன்று முக்கியமான கட்டத்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் அவுட்டாகி உள்ளார்.
ஆஸ்திரேலியா ஸ்பிரிங்: இந்த போட்டியில் ஆஸ்திரேலியா காலில் ஸ்பிரிங் வச்சு ஆடுதோ என்று கேட்கும் அளவிற்கு சிறப்பாக பீல்டிங் செய்கின்றனர். முதல் 5 ஓவரிலேயே 5 பவுண்டர்களை சேவ் செய்தனர். முக்கியமாக ஹெட் இன்று எகிறி எகிறி பீல்டிங் செய்தார். அவரின் பீல்டிங் அவ்வளவு சிறப்பாக இருந்தது . ஆஸ்திரேலியா காலில் ஸ்பிரிங் வச்சு ஆடுதோ என்று சந்தேகம் அடையும் அளவிற்கு அவர்களின் பீல்டிங் இருந்தது.
2003 ஸ்பிரிங்: 2003ல் கூட இதேபோல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்பிரிங் வைத்து ஆடினார்கள் என்று வதந்தி பரப்பி பல நாட்கள் 90ஸ் கிட்ஸ் இடையே விவாதங்கள் நடந்தது எல்லாம் வரலாறு.
இன்று நடக்கும் 2023 உலகக் கோப்பை வேறும் பைனல் என்பதை தாண்டி எந்த அளவிற்கு 90ஸ், 80ஸ் கிட்ஸ்களுக்கு முக்கியம் என்பது 2கே கிட்ஸ்களுக்கு தெரிந்து இருக்காது. ஆனால் 20 வருடமாக இந்தியர்கள் மனதில் இருக்கும் காயத்தை ஆற்ற போவது இன்று ஒருநாள் நடக்கும் போட்டிதான்.
2003 உலகக் கோப்பை பைனல்: 2003 உலகக் கோப்பையில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் பைனலில் தோல்வி அடைந்தது. அந்த நாளை கிரிக்கெட் பார்க்கும் யாரும் மறக்க மாட்டார்கள். கங்குலியின் மோசமான கேப்டன்சி, அவரின் திட்டமிடல் எல்லாம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. அதோடு டாஸில் அவர் எடுத்த முடிவும் கூட கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இதில் முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து.. 359/2 ரன்களை எடுத்தது. ரிக்கி பாண்டிங் 140* (121) ரன்கள் எடுத்து இந்திய அணியை துவம்சம் செய்தார். அதன்பின் இறங்கிய இந்திய அணியில் சேவாக் மட்டும் 82 ரன்கள் எடுத்தார். சச்சின் 4, கங்குலி 24 எடுத்து சொதப்பினர். அதன்பின் ராகுல் டிராவிட் 47 எடுத்தார். அதன்பின் யுவராஜ் சிங் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆக இந்திய அணியின் அடுத்த விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல சரிந்தது. 39.2 ஓவருக்கு 234 ரன்களை மட்டும் எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆகி கோப்பையை இழந்தது.