Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவின் வெற்றிக்கு காரணம்.... அப்பாக்கள்தான்!

Recommended Video

டோனிக்காக கோப்பையை வெல்ல விரும்புகிறோம் - ரெய்னா

சென்னை: இந்த ஐபிஎல்லில் வேறு எந்த அணிகளுக்கும் இல்லாத ஒரு பெரிய பெருமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உண்டு. அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் அப்பாக்கள் தான்.

அப்பாக்கள் என்றால், எந்த வீரர்களுடைய அப்பாக்கள் என்ற கேள்வி எழலாம். பதில், அப்பாக்களான அந்த வீரர்கள்தான்.

இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை ஏலம் எடுத்தபோது, இது வயதானவர்களின் அணி என்று விமர்சனம் செய்யப்பட்டது.

ஆனால், சிஎஸ்கேவின் அணியை பார்த்தால், மிகவும் திட்டமிட்டு, அணியைத் தேர்வு செய்துள்ளனர். இதற்கு முன் பல்வேறு அணிகளுக்காக விளையாடி கோப்பையை வென்றவர்கள், தற்போது சிஎஸ்கேவில் உள்ளனர்.

சீனியர் வீரர்கள்

சீனியர் வீரர்கள்

கேப்டன் கூல் தோனி முதற்கொண்டு தற்போதுள்ள சீனியர்கள் பலரும் ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றவர்கள். ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வெறியுடன், சரியான வாய்ப்பு கிடைக்கமல் இருந்தவர்களும் சிஎஸ்கேவில் உள்ளனர்.

திட்டமிட்டு எடுத்தனர்

திட்டமிட்டு எடுத்தனர்

ராயுடு, வாட்சன், தீபக் சாஹர், ஹர்பஜன் என ஒவ்வொருவரும் இவ்வாறே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவ்வாறு ஒவ்வொரு அணியில் இருந்து குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்து அவர்களை சிஎஸ்கே ஏலம் எடுத்தது.

அப்பாக்களின் அணி

அப்பாக்களின் அணி

36 வயதாகும் தோனி, 32 வயதாகும் ராயுடு, 31 வயதாகும் சுரேஷ் ரெய்னா, 34 வயதாகும் பிராவோ, 37 வயதாகும் ஷேன் வாட்சன், 37 வயதாகும் ஹர்பஜன் என, இந்த அப்பாக்கள்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியமானவர்கள்.

நீண்ட அனுபவம்

நீண்ட அனுபவம்

இரண்டாண்டு தடைக்குப் பிறகு திரும்பியுள்ள சிஎஸ்கே, இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தது. அதன்படியே இதுவரை நடந்துள்ளது. நீண்ட அனுபவம் உள்ள இந்த அப்பாக்களின் அணியே, பைனல்ஸில் ஹைதராபாத் அணியுடன் நாளை விளையாட உள்ளது.

Story first published: Saturday, May 26, 2018, 16:04 [IST]
Other articles published on May 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+