அறிமுக வீரர்கள் எல்லாருக்கும் தன்னம்பிக்கை இதுமூலமா தான் கிடைச்சுது... விளக்கமளித்த கோச்
மெல்போர்ன் : கொரோனா காரணமாக தங்களது வீடுகளில் முடங்கியிருந்த வீரர்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஐபிஎல் போட்டிகளில் பஙகேற்று விளையாடினர்.
இதன் காரணமாக முன்னதாக 8 மாதங்களாக வீடுகளில் முடங்கியிருந்த அவர்களுக்கு சிறப்பான பயிற்சி கிடைத்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் மூலமாகவே அறிமுக வீரர்களுக்கு சிறப்பான பயிற்சி கிடைத்ததாகவும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்ததாகவும் இந்திய அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்கள் திட்டமிடப்பட்டு இரண்டு தொடர்கள் நடந்து முடிந்துள்ளன. முன்னதாக இந்திய வீரர்கள் 8 மாதங்களாக கொரோனா காரணமாக தங்களது வீடுகளில் முடங்கியிருந்த நிலையில், ஐபிஎல் அவர்களுக்கு சிறப்பான பயிற்சியாக அமைந்தது.
இந்நிலையில், அறிமுக வீரர்களுக்கு ஐபிஎல் போட்டிகள் மிகுந்த தன்னம்பிக்கையை அளித்ததாக இந்திய அணயின் தலைமை கோச் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூத்த வீரர்களுடன் ஒருங்கிணைந்து ஐபிஎல் போட்டிகளில் அவர்கள் விளையாடியதால் அவர்களது தயக்கங்கள் போனதாகவும், அதை தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் காண முடிவதாகவும் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications