4 மற்றும் 6 கூடவே டீலிங் வச்சுக்கிட்டு இருந்தவரு... ஷேவாக்கிற்கு சச்சின் பாராட்டு
மும்பை : முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் தன்னுடைய 42வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி வருகிறார்.
இவர் தன்னுடைய கேரியரில் 104 டெஸ்ட் போட்டிகள், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து கடந்த 2015 அக்டோபரில் இவர் ஓய்வு அறிவித்தார்.
இந்நிலையில் இன்று ஷேவாக்கின் பிறந்ததினத்தையொட்டி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்டவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

டெஸ்டில் 2 முச்சதம் எடுத்தவர்
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் பல்வேறு சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் காரணமாக இருந்தவர். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர். 2 முச்சதத்தை எடுத்தவர். 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர். கடந்த 2015ல் இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு அறிவித்தார்.

கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து
இந்நிலையில் ஷேவாக் தனது 42வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடி வருகிறார். அதையொட்டி அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஷேவாக் தன்னுடைய கேரியரில் 4 மற்றும் சிக்ஸ்களுடன் மட்டுமே டீலிங் வைத்திருந்ததாக முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

விவிஎஸ் லஷ்மன் வாழ்த்து
டிவிட்டர் மூலம் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ளார். இதனிடையே, ஷேவாக்கின் தன்னம்பிக்கை உள்ளிட்டவை வாழ்க்கையை எளிமையாக்கிக் கொள்ள உதவியதாக முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா புகழ்ச்சி
முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய பெரிய அண்ணன் ஷேவாக் என்றும் தன்னுடைய வாழ்க்கைக்கு உத்வேகமாக இருந்தவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கைப் பாதையின் பல்வேறு காலகட்டத்தில் தன்னை வழிநடத்தியவர் என்றும் அவர் புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications