Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தனியா போங்க.. இந்திய வீரர்களுக்கு உத்தரவிட்ட ஆஸி.. மொத்தமாக நிறுத்தப்பட்ட பயிற்சி.. காரணமே வேறு!

சிட்னி: இந்திய அணியின் 5 முக்கியமான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் கிரிக்கெட் பயிற்சி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முக்கியமான கட்டத்தை நெருங்கி உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வென்று, தொடரை கைப்பற்ற ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் தீவிரமாக முயன்று வருகிறது.

இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட முக்கியமான கட்டத்தில்தான் இந்திய அணியின் முக்கியமான ஐந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டனர்

தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய வீரர்களுடன் இவர்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை.

பயிற்சி

பயிற்சி

நீங்கள் தனியாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் . மற்ற வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டால் கொரோனா பரவும் அபாயம் ஏற்படும். வீரர்களின் பாதுகாப்பு கருதி நீங்கள் தனியாக பயிற்சி மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும். அதனால் நீங்கள் தனியாக பயிர்த்தி மேற்கொள்ள வேண்டும் என்று 5 வீரர்களுக்கும் ஆஸ்திரேலிய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நிறுத்தம்

நிறுத்தம்

இது பிசிசிஐ அமைப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ள நிலையில் தற்போது மொத்தமாக இந்திய அணியின் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வீரர்களுக்கு ஏற்கனவே பயிற்சியில் ஓய்வு அளிக்கப்பட்டது.இந்த நிலையில் மற்ற வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் போது மழை பெய்துள்ளது. இதனால் மொத்தமாக பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது.

குழப்பம்

குழப்பம்

3வது டெஸ்ட் போட்டிக்கு தீவிரமாக தயாராக இந்திய அணி திட்டமிட்டது. ஆனால் அடுத்தடுத்த தடங்கல்கள் காரணமாக மொத்தமாக பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் சிலர் போதிய பயிற்சி இன்றி கஷ்டப்படுவதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சொதப்பி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Story first published: Sunday, January 3, 2021, 12:36 [IST]
Other articles published on Jan 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+