Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித்தின் காயம் பத்தி எதுவுமே தெரியல... தெளிவு இல்ல... கேப்டன் குற்றச்சாட்டு!

சிட்னி : இந்திய குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் துணை கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இடம்பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக தற்போது அவர் பெங்களூருவின் என்சிஏவில் பயிற்சி பெற்று வருகிறார். வரும் 11ம் தேதி அவருக்கு பிட்னஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் ரோகித்தின் காயம் குறித்த குழப்பம் நீடிப்பதாகவும் தெளிவு ஏற்படுத்தப்படவில்லை என்றும் கேப்டன் விராட் கோலி தெவித்துள்ளார்.

காயத்தால் பாதிக்கப்பட்ட ரோகித்

காயத்தால் பாதிக்கப்பட்ட ரோகித்

ஐபிஎல் 2020 சீசனின் போது காயம் ஏற்பட்ட குறைந்த ஓவர்களின் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து டெஸ்ட் தொடரில் மட்டும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. ஆனால் 70 சதவிகித பிட்னசுடன் மட்டுமே அவர் உள்ளதாக கூறி தற்போது என்சிஏவில் அவர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

11ம் தேதி பிட்னஸ் சோதனை

11ம் தேதி பிட்னஸ் சோதனை

பெங்களூருவின் என்சிஏவில் அவர் மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் தங்களது பிட்னசை நிரூபிக்கும் வகையில் பயிற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது டெஸ்ட் தொடரிலிருந்து இஷாந்த் சர்மா நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே வரும் 11ம் தேதி ரோகித்திற்கு பிட்னஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

கேள்விக்குறியான பங்கேற்பு

கேள்விக்குறியான பங்கேற்பு

அடுத்த மாதம் 17ம் தேதி இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி துவங்கவுள்ள நிலையில், 11ம் தேக்கு பிறகு ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டு 14 நாட்கள் குவாரன்டைனையும் முடித்து போட்டிகளில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தொடர் குழப்பம் -கோலி

தொடர் குழப்பம் -கோலி

இந்நிலையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்து தெளிவு ஏற்படுத்தப்படவில்லை என்றும் தொடர்ந்து குழப்பம் நீடிப்பதாகவும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். முன்னதாக காயம் காரணமாக ரோகித் ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறமாட்டார் என்று தேர்வாளர்கள் கூறியதாகவும், இதுகுறித்து ரோகித்திற்கு தெரிவிக்கப்பட்டு அவரும் உடன்பட்டதாக தன்னிடம் கூறப்பட்டதாகவும் விராட் குறிப்பிட்டுள்ளார்.

வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்

வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்

இன்றைய ஒருநாள் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஆனால் தேர்வுக்குழு மீட்டிங்கை அடுத்து ரோகித் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடியதை சுட்டிக் காட்டினார். விரித்திமான் சாஹாவை போல ரோகித் மற்றும் இஷாந்த் இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் தங்களது பிட்னசை நிரூபிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Story first published: Friday, November 27, 2020, 10:43 [IST]
Other articles published on Nov 27, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+