Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சில தினங்களில் ஐபிஎல் 2021 ஏலம்... வீரர்கள் பட்டியல் ரெடிங்கோ.. 292 வீரர்கள் பங்கேற்க இருக்காங்க!

டெல்லி : ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில் வரும் 18ம் தேதி இந்த தொடருக்கான ஏலம் சிறிய அளவில் சென்னையில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த ஏலத்திற்காக சர்வதேச அளவில் 1114 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது 292 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஏலம்

சென்னையில் ஏலம்

ஐபிஎல் 2021 தொடர் வழக்கம்போல வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி மற்றும் இடத்தை பிசிசிஐ இன்னும் இறுதி செய்யவில்லை. ஆனால் வரும் 18ம் தேதி இதற்கான ஏலம் சென்னையில் சிறிய அளவில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

292 வீரர்கள் பங்கேற்பு

292 வீரர்கள் பங்கேற்பு

ஏலத்திற்காக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்கள் என 1114 வீரர்கள் தங்களை பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அணிகளின் முடிவுகளை கருத்தில் கொண்டு 292 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தங்களுக்கு தேவையான வீரர்களை 8 ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் எடுக்கவுள்ளன.

10 வீரர்கள் பதிவு

10 வீரர்கள் பதிவு

அதிகப்பட்ச ஏலத்தொகையான 2 கோடி ரூபாய் ஆதார விலைக்கு இந்திய வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் கேதார் ஜாதவ் மற்றும் 8 வெளிநாடடு வீரர்கள் க்ளென் மாக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஷாகிப் அல் ஹசன், மொயின் அலி, சாம் பில்லிங்ஸ், லியாம் பிளங்கெட், ஜேசன் ராய் மற்றும் மார்க் வுட் ஆகியோர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

12 வீரர்கள் பதிவு

12 வீரர்கள் பதிவு

அடுத்ததாக 1.5 கோடி ரூபாய்க்கு 12 வீரர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஹனுமா விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இந்திய வீரர்கள் உள்ளிட்ட 11 வீரர்கள் ஒரு கோடி ரூபாய் ஆதார விலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து 164 இந்திய வீரர்கள் 125 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்டவர்களும் இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.

வரும் 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள இந்த ஏலம் பிற்பகல் 3 மணியளவில் துவங்கவுள்ளது.

Story first published: Friday, February 12, 2021, 12:48 [IST]
Other articles published on Feb 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+