Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த அழகான நாட்கள் திரும்பவும் கிடைக்காது... ரோகித் சர்மா உருக்கம்

டெல்லி : கொரோனா வைரஸ் ஊடரங்கு நாடெங்கிலும் அமலில் உள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Recommended Video

இந்த அழகான நாட்கள் திரும்பவும் கிடைக்காது... ரோகித் சர்மா உருக்கம்

இதனிடையே, தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ள துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, தன்னுடைய மனைவி ரித்திகா மற்றும் மகள் சமைராவுடன் பொழுதை போக்கி வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது பதிவுகளுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

மும்பை இந்தியன்ஸ் கேப்டன்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமாக சிறப்பாக செயல்பட்டு வருபவர் ரோகித் சர்மா. இவர் கொரோனாவால் ஏற்பட்டுள்ள ஊடரங்கு காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ளார். இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது பதிவுகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு தெரிவித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் பதிவுகள்

இன்ஸ்டாகிராமில் பதிவுகள்

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் வீட்டில் முடங்கியுள்ள ரோகித் சர்மா, தன்னுடைய மனைவி ரித்திகா மற்றம் மகள் சமைராவுடன் பொழுதை இனிமையாக போக்கி வருகிறார். இதுகுறித்து அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தன்னுடைய 3வது இரட்டை சதத்தின்போது தன்னுடைய மனைவி உணர்ச்சிவசப்பட்டு அழுதது குறித்தும் சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.

க்யூட் வீடியோ பதிவு

க்யூட் வீடியோ பதிவு

இந்நிலையில் தற்போது தன்னுடைய மகள் சமைராவுடன் அவர் விளையாடும் பதிவை அவரது மனைவி ரித்திகா படம் பிடித்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரோகித் சர்மா. அந்த வீடியோவில் ரோகித் கையை நீட்டி ஆட்டம் காண்பிக்க, சமைரா ரொம்பவும் க்யூட்டாக, அவரை பிடிக்க அவரை சுற்றி வருகிறார். சமைராவின் சிரிப்பு பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டாக இருக்கிறது.

மீண்டும் திரும்பாது

மீண்டும் திரும்பாது

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ரோகித் சர்மா, இந்த அழகிய நாட்கள் மீண்டும் திரும்பி வராது என்று கேப்ஷன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் அதிகளவில் லைக்குகளை அளித்துள்ளனர். மேலும் ரோகித் மற்றும் சமைராவை பாராட்டி கமெண்ட்டுகளும் குவிந்தவண்ணம் உள்ளது.

Story first published: Sunday, June 7, 2020, 10:57 [IST]
Other articles published on Jun 7, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+